சென்னை, ஆக.25 தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால விரயம் - சில்லறைத் தட்டுப்பாடு - எரிபொருள் வீணாவது போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே, இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 90% சுங்கச்சாவடிகளில் உள்ள ஐந்து நுழைவாயில்களில், ஃபாஸ்டேக் பரி வர்த்தனைக்காக நான்கு நுழை வாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமி ருக்கும் ஒரு நுழைவாயிலில் மட்டுமே, சுங்கவரியை பணமாகச் செலுத்த முடியும்.
இருந்தும் சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. இதனிடையே ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கட்டணம் வசூலிப்பு முறையை அமல் படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப் பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செப்.1 முதல் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. மாற்றி அமைக்கப்படவுள்ள கட்டணம் ஒரு வருடம் வரை அமலில் இருக்கும். மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 50 பிளாசாக்கள் உள்ளன. மீதமுள்ள பிளாசாக்களில் உள்ள கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் திருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment