வருகிறது தக்காளி காய்ச்சல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

வருகிறது தக்காளி காய்ச்சல்!

புதுடில்லி, ஆக. 24- கரோனா வைரஸை தொடர்ந்து இந்தியாவில் தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 5 வயதுக்குட் பட்ட 82 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத் தைச் சேர்ந்த ஒரு குழந் தைக்கு தக்காளி காய்ச்சல் இருப்பது கடந்த மே 6-ஆம் தேதி முதல் முதலில் கண்டறியப்பட்டது. பின் னர் நெடுவத்தூர், ஆரியங் காவு, அன்சால் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த காய்ச் சல் பரவி உள்ளது. இது வரை 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகளும், 10 வய துக்குட்பட்ட 26 சிறுவர் களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

இந்த வைரஸால் பாதிக் கப்படுவோருக்கு, சிக்குன் குன்யா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல் ஏற்படும். பின்னர் உடல் முழுவதும் சிறு கொப் புளங்கள் தோன்றும். இது சற்று பெரிதாகி தக் காளி போல சிவப்பாக தோன்றும். இதனாலேயே இதற்கு தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இது தொற்றும் தன்மை கொண்டது ஆகும்.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. உடல், மூட்டு வலி கடுமை யாக இருக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு இருக் கும். அதேநேரம் இந்த காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த காய்ச் சல் பரவுவதை கட்டுப் படுத்துவது குறித்து நிபு ணர்கள் ஆராய்ச்சி மேற் கொண்டு வருகின்றனர். இந்த காய்ச்சலை கட்டுப் படுத்தத் தவறினால், பெரியவர்களுக்கு பரவி மோசமான விளைவு களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் எச் சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment