'சாமி' சிலைகளை மடக்கிய ஆசாமி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

'சாமி' சிலைகளை மடக்கிய ஆசாமி

சென்னை,ஆக.31- சென்னை அண்ணாநகர் 5ஆவது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பழைமையான சிலைகளை மறைத்து வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறை காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ஜெயந்த் முரளி, காவல்துறை அய்.ஜி. தினகரன் உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் ரவி தலைமையில், காவல்துறை துணை கண்காணிப்பாளர்  முத்துராஜா மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் ரவீந்திரன், வசந்தி உள்ளிட்ட தனிப்படை காவல்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். 

2 சிலைகள் சோதனையின்போது, அமர்ந்த நிலையில் இருந்த மாரியம்மன் சிலை, நடனமாடும் நடராஜர் சிலை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுகுறித்து அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, தனது தந்தை காலம் முதலே அந்த 2 சிலைகளும் தங்கள் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், சிலை எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்த ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. சிலைகளை காவல்துறையினர் ஆராய்ந்தபோது, திருவிழா காலங்களில் பல்லக்கில் எடுத்து சென்ற அடையாளங்கள் அதில் இருந்தன. இதனால் அந்த சிலைகள் கோவில்களில் வைக்கப்பட்டிருந்தது உறுதியானது. 300 ஆண்டுகள் பழமையானவை முறையான ஆவணங்கள் இல்லாததால், அந்த 2 சிலைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாரியம்மன் உலோக சிலை 40 கிலோ எடையிலும், நடராஜர் உலோக சிலை 13 கிலோ எடையிலும் இருந்தது. இந்த சிலைகள் எந்தெந்த கோவில்களுக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சிலைகளை ஆய்வு செய்த தொல்லியல் துறை நிபுணர் சிறீதரன், 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்று தெரிவித்தார். இந்த சிலைகள் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும்.


No comments:

Post a Comment