புனே, ஆக.25- மதம், பக்தியின் பெயரால் மூடநம்பிக்கைகள் அப்பாவி மக்களிடம் திணிக்கப்படுவதும், குறிப்பாக பெண்கள் பெரும் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படு வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மராட்டிய மாநிலத்தில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தினர் சாமியார் ஒருவரிடம் சென்றுள்ளனர். ஆண்குழந்தை பிறக்க வேண் டுமானால் திறந்தவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்றும் பல்வேறு சடங்குகளை செய்ய வேண்டும் என்றும் அந்த மோசடி சாமியார் கூறியுள்ளார். பெண்ணை துன்புறுத் திய சாமியாரும், பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தினரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மராட்டிய மாநிலம், புனேவை சேர்ந்த பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரது கணவர் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் கணவரும் அவரது குடும் பத்தினரும் ஆண் குழந்தை பிறக்க வேண்டி சாமியார்களைச் சந்தித்து வந்துள்ளனர்.
அவர்கள் கூறியதைக் கேட்டு அந்த பெண்ணை பல சடங்குகள் செய்ய வலியுறுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அவரது கணவர் கோலாப்பூரைச் சேர்ந்த ஒரு சாமியாரைச் சந்தித்துள்ளார்.
அப்போது அவர் ஆண்குழந்தை வேண் டும் என்றால் நீர் வீழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக மனைவியை குளிக்கச் சொல் என கூறியுள்ளார். இதையடுத்து அவரது கணவரும், மாமியார் மற்றும் குடும்பத்தினர் அந்த பெண்ணை ராய்காட் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பிறகு அவர் நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர், சாமியார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment