வேண்டாம் பொம்மை விளையாட்டு
* புதுக்கோட்டை தேர் விபத்தில் காயம் அடைந்த வர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்.
- அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்
>> கடவுளிடம் நிவாரணம் கிடைக்காதா?
யாரிடம் விசாரணை?
* புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்தது - கூடுதல் ஆணையர் விசாரிப்பு.
>> கோவில் கடவுளிடம் விசாரணை நடத்தப்படுமா?
சலுகை யாருக்கு?
* முற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்குச் சலுகை - பார்ப்பனர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம்
>> முற்படுத்தப்பட்டவர்களுக்கு ஏன் சலுகை?
அவருக்குத் தெரிந்த மொழி
* துப்பாக்கி எடுப்பவர்களுக்குத் துப்பாக்கியால் தான் பதில்.
- ஆளுநர் ரவி அய்.பி.எஸ்.
>> போலீஸ்காரர் அல்லவா - அந்த மொழியில் பேசுகிறார்.
இவர்களின் ஹிந்துத்துவா
* வாஞ்சிநாதனைப் புகழ்ந்த பிரதமர் மோடி.
>> கோட்சே உள்பட கொலைகாரர்களைப் புகழ்வதுதான் இவர்களின் ஹிந்துத்துவா!
எங்கே போகிறோம்?
* 'யூடியூப்' பார்த்து ஒயின் தயாரித்த 6 ஆம் வகுப்பு மாணவன்.
>> விஷம் அழகாக இருக்கிறது என்று குடிக்கலாமா?
No comments:
Post a Comment