மயிலாடுதுறை திராவிடர் கழக தோழர் காலஞ்சென்ற ஆர்.வைத்தியநாதன் அவர்களின் வாழ்விணையரும், கழக தோழர் சின்னப்பிள்ளை என்கிற பி.இராஜேந்திரனின் சகோதரியும், நகர தலைவர் சீனி.முத்துவின் மாமியாருமான திருமதி சேது அவர்கள் 31.7.2022 அன்று நண்பகல் 12 மணிக்கு உடல்நலக் குறைவால் மறைவுற்றார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டச்செயலாளர் கி.தளபதிராஜ் தலைமையில் அவரது உடலுக்கு 1.8.2022 அன்று இறுதி மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட துணைச்செயலாளர் அரங்க. நாகரத்தினம், ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், நகர செயலாளர் பூ.சி.காமராஜ், துணைச்செயலாளர் க.அருள்தாஸ், இரெ.புத்தன், பகுத்தறிவாளர் கழக தோழர்கள் அண்ணா தாசன், கே.ஜி.நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment