சென்னை, ஆக.27- உணவுமுறைகளில் சிறிது மாற்றம் செய்தால் நீரிழிவு நோயில் இருந்து விடுபட முடியும் என்று தேசிய அளவிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நமது நாட்டில் 7 கோடியே 40 லட்சம் மக்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது. 8 கோடிக்கும் அதிகமான வர்களுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வரலாம்.
உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் (தெற்கு மற்றும் கிழக்கில் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி. வடக்கு மற்றும் மேற்கிந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை) பயன்படுத்துவதால் டைப் 2 நீரிழிவு நோய்க்கு அதிக வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான இந்தியர்களின் உணவில் 65 விழுக்காடு முதல் 70 விழுக்காடு வரை கார்போஹைட்ரேட் உள்ளது. புரதச்சத்து மிகக் குறை வாக உள்ளது. நாடு முழுவதும் 18,090 பேரிடம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அய்சிஎம்ஆர்) ஆதர வுடன் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசியள விலான ஆய்வில், இந்திய உணவில் கார்போஹைட் ரேட் உள்ளடக்கத்தை 49 முதல் 54 விழுக்காடு வரை குறைத்து புரதச்சத்தை 19 முதல் 20விழுக்காடு வரை அதிகரித்து கொழுப்பை 21 விழுக்காடு முதல் 26 விழுக் காடு வரை பராமரித்தால் சர்க்கரை நோயிலிருந்து படிப் படியாக விடுபட முடியும் என்பது தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையிலிருந்து நீரிழிவு நோய்க்கு முன்னேறுவதைத் தடுக்க, நமது அன்றாட உணவில் கார்போஹைட்ரேட் 54 முதல் 57 விழுக்காடு, புரதம் 16 முதல் 20 விழுக்காடு மற்றும் கொழுப்பு 20 முதல் 24 விழுக்காடு இருந்தால் போது மானது என்று இந்த ஆய்வை மேற்கொண்ட மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் (எம்டிஆர்எப்) துணைத் தலைவர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா தெரிவித்துள்ளார்.
அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி.மோகன், கூறுகையில் “இந்தியர்கள் கார்போஹைட்ரேட் உட்கொள் வதை குறைத்து, புரதத்தை (காய்கறிகளுக்கு முன்னுரிமை) அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலமும் மாற்றத்தை உருவாக்கமுடியும் என்றார். இதனால் நீரிழிவு மட்டுமல்ல, இதய நோய்களையும் தடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நீரிழிவு நோய் பற்றிய மிகப்பெரிய ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment