சென்னை, ஆக.2- தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளில் உள்ள 16 காலி பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப் பிக்க ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழில் ஆலோசகர் (மருத்துவக் கல்வித் துறை), சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பணியிடங்களில் 16 காலியிடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக ஆகஸ்ட் 26ஆம் தேதிக் குள் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு இல்லை. ஆனால், விண்ணப்பதாரர்கள் சம்மந்தப் பட்ட துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினி வழித் தேர்வு
சமூக அலுவலர் பதவிக்கு நவம்பர் 12ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலிலும், தொழில் ஆலோசகர் பதவிக்கு நவம்பர் 13ஆம் தேதி பிற்பகலிலும் கணினி வழித் தேர்வுகள் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தை திருத்தம் செய்துகொள்ள ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment