தமிழ்நாட்டில் மின்வெட்டு வராது மின்சார வாரியம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

தமிழ்நாட்டில் மின்வெட்டு வராது மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை, ஆக. 20 மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ ஒன்றிய அரசு தடை விதித்த நிலையில், இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டின் மின்சார தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் அரசு உற்பத்தி செய்து வருகிறது. இதன் காரணமாக வெளிச் சந்தையில் இருந்து தமிழ் நாட்டிற்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. ஒன்றிய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம், மாநிலங்களில் உள்ள டிஸ்காம்ஸ் எனப்படும் மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஸ்காம்ஸ் சார்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு பணம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது பல மாநிலங்களில் உள்ள டிஸ்காம்ஸ் சார்பில் மின்சாரத்திற்கு பணம் செலுத்தாமல் இழுத்தடிக்கப் பட்டு வருகிறது. 

5,083  கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தாத தால், தமிழ்நாடு, தெலங்கானா, பீகார் உள்ளிட்ட 13 மாநி லங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபடதடை விதிக்கப்பட் டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் நிலவியது. இந் நிலையில் மின்சாரம் வாங்க ஒன்றிய அரசு தடை விதித்த போதும் எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழ்நாடு மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சார்பில் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டிய 926 கோடி ரூபா யில் 700 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாடு அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 226 கோடி ரூபாய் மட்டும்தான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மின் தேவைக்கு ஏற்பத்தான் மின்சாரம் வாங்கப்படுவதாகவும், அக்டோபர் வரை மின் தேவை பெரியளவில் உயர வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment