சென்னை, ஆக.3 வருவாயை அதி கரிக்கும் நோக்கில், அரசு விரைவுப் பேருந்துகளில் இன்று முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. அதற்காகப் பேருந்தின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பேருந்துக்குப் பின்னால் ஒரு சரக்கு பெட்டி என, பேருந்துக்கு மூன்று பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக் கப்பட உள்ளது. முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூரி லிருந்து சென்னைக்கு பார்சல் சேவை தொடங்குகிறது. தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் பார்சல் களை அனுப்பலாம்.
திருச்சி- சென்னை, ஓசூர்- சென் னைக்கு 80 கிலோ பார்சல் வரை 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்க்காமல் ரூ.210 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் பார்சலுக்கு மதுரை- சென்னைக்கு ரூ.300, கோவை- சென்னைக்கு ரூ.330 என வும், நெல்லை, தூத்துக்குடி, செங் கோட்டையில் இருந்து சென்னைக்கு பார்சல் கட்டணம் ரூ.390 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment