ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக் கெடுப்பில் முதலமைச்சர் நிதிஷ் தலைமையிலான மகா கூட்டணி அரசு, குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. 

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய வழக்கில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஒன்றிய அரசு ஏன் ஆலோசிக்கக் கூடாது? என உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 இலவசங்கள் விவகாரத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முடிவு செய்ய வேண்டும், நீதித்துறை அல்ல: வெங்கையா நாயுடு

 தெலுங்கில் பெயர்ப் பலகைகளை வைக்கத் தவறினால், மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்க ளுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என ஆந்திர பிரதேசம் அலுவல் மொழி ஆணையத்தின் தலைவர் யர்லகடா லட்சுமி பிரசாத் எச்சரிக்கை.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment