சென்னை, ஆக. 9- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 1,500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதல் கேமராக்களை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயரதி காரிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 3,454 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிக் கும் பெண்கள் பாதுகாப்பு கருதி நிர்பயா திட்டத்தின்கீழ் 2,500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிடப்பட்டது.
ஒவ்வொரு பேருந்திலும் தலா 3 கேமரா, அவசர அழைப்பு பொத்தான், வீடியோ ரெக்கார்டர் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கேமரா பொருத்தப்பட்ட 500 பேருந்துகளை கடந்த மே மாதம் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
இதன்பிறகு தற்போது வரைமொத்தமாக 1,000 பேருந்து களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,500 பேருந்துகளில் கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.
இதற்காக கூடுதலாக தேவைப்படும் அதிநவீன தொழில்நுட்பம்கொண்ட கேமராக்களை வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
-இவ்வாறு மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறினர்.
கடவுள் சக்தியைப் பாரீர்!
புதுக்கோட்டை கோயில்
தேர் கவிழ்ந்து மூதாட்டி மரணம்
புதுக்கோட்டை, ஆக. 9- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா ஜூலை 31ஆம் தேதி நடைபெற்றது. தேரோட்டம் தொடங்கிய சில விநாடிகளிலேயே தேர் முன்புறமாக சாய்ந்தது.
இதில், அரிமளம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி ராஜகுமாரி(61) உட்பட 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி 7.8.2022 அன்று உயிரிழந் தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் இயக்குநர் கண் ணன் தலைமையிலான குழு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது
இந்த விபத்து தொடர்பாக கோயிலில் தேர் கட்டும் பணியில் ஈடுபடும் தற்காலிகப் பணியாளர்கள் 2 பேர் மீது திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment