சென்னை, ஆக. 31 யூனியன் ஏஎம்சி நிறுவனம் யூனியன் ஓய்வூதிய நிதியை அறிமுகப்படுத்தியது. இது 5 ஆண்டுகள் அல்லது ஓய்வு பெறும் வயது வரை (எது முந்தையதோ) லாக்-இன் கொண்ட ஒரு திறந்தநிலை ஓய்வூதிய தீர்வு சார்ந்த திட்டமாகும். யூனியன் ரிடையர்மென்ட் ஃபண்டின் ("திட்டம்") புதிய நிதிச் சலுகை (NFO) செப்டம்பர் 1, 2022 அன்று திறக்கப்பட்டு செப்டம்பர் 15, 2022 அன்று முடிவடையும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 மற்றும் அதன் பிறகு முதலீட்டாளர்கள் ரூ.1 மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தின் கட்டமைப்பு வாடிக்கையாளர் களுக்குத் தேவையான ஒழுக்கத்தை அடைவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகள் அல்லது ஓய்வுபெறும் வயது ஆகியவற்றில் கட்டாயப் பூட்டுடன் வருகிறது மற்றும் பங்கு முதலீட்டுத் திட்டத்தை மட்டுமே வழங்குகிறது என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. பிரதீப்குமார் தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment