புதுடில்லி, ஆக. 20- பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக் கில், ஒன்றிய உள்துறை அமைச் சகத்தின் சமீபத்திய வழிகாட்டு தலுக்கு மாறாக குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட் டியுள்ளது.
பாலியல் வன்கொடுமையு டன் கொலையும் செய்த குற்ற வாளிகளை சிறை நிர்வாகம் முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது என்று ஒன்றிய உள் துறை அமைச்சகத்தின் சமீபத் திய வழிகாட்டுதலில் தெரிவிக்கப் பட்டுள்ள நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளும் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டு உள்ளனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்:
பாலியல் வன்கொடுமையு டன் கொலையும் செய்த குற்ற வாளிகளை சிறை நிர்வாகம் முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சமீபத்திய வழி காட்டுதலில் தெரிவித்துள்ளது என்று பதிவிட்டார்.
இதுகுறித்து அவர் டில்லியில் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், ‘சிபிஅய் போன்ற ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்ட வழக்குகளில், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் குற்றவா ளிகளின் தண்டனைக் காலத்தை மாநில அரசால் குறைக்க முடியாது. பில்கிஸ் பானு வழக் கில் 11 பேரையும் விடுவிக்க ஒன் றிய அரசின் ஒப்புதலை குஜராத் அரசு பெற்றதா என்ற கேள்விக்கு பிரதமர் மோடியும், ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் பதிலளிக்க வேண்டும்.
1992-ஆம் ஆண்டின் சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், 11 பேரையும் விடுவித்ததாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அந்தக் கொள்கையை 2013-ஆம் ஆண்டே குஜராத் அரசு ரத்து செய்துவிட்டது. அப்போது குஜராத் முதலமைச் சராக இருந்தவர் பிரதமர் மோடி’ என்று தெரிவித்தார்.
பில்கிஸ் பானு அறிக்கை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது வாழ்க் கையை சீரழித்த 11 குற்றவாளிகள் விடுக்கப்பட்டனர் என்று கேள் விப்பட்ட போது அதிர்ச்சி ஏற் பட்டது. அவர்களின் விடுதலை, என் அமைதியை பறித்தது மட்டுமல்லாமல் நீதி மீதான நம்பிக்கையையும் அசைத்துவிட் டது. தயவு செய்து விடுதலை உத்தரவை திரும்ப பெறுங்கள். நான் அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை சுதந் திரத்தை திரும்பக் கொடுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment