தெய்வ சக்தி இதுதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 1, 2022

தெய்வ சக்தி இதுதான்!

கோயில் விழாவில் தேர் கவிழ்ந்து விழுந்ததில் 8 பேர் காயம்

புதுக்கோட்டை, ஆக. 1- புதுக்கோட்டையில்  பிரகதம்பாள் கோயில். கி.பி.ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா 31.7.2022 காலை எட்டரை மணிக்கு தொடங்கியது. 

தேர் இழுக்கத் தொடங்கியவுடனேயே பத்தடி தூரத்திலேயே தேர் கவிழ்ந்து விழுந்தது. இதில் பக்தர்களுக்கு என்று சொல்லக்கூடிய 8பேர் காயம் அடைந் தனர். அவர்களில் தேருக்கு கட்டை போட்டு வரும்வைரவன் என்பவரும் ஒருவராவார்.

தேர் இழுக்கும் போது எப்போதும் போல் ‘கடவுளர்‘ சிலை இருந்ததே தவிர பார்ப்பான் யாருமில்லை. இது ஆபத்தான தேர் என்று அவனுக்கு தெரிந்திருக்கும் போல. காயமடைந்த வர்களை உடனடியாக மீட்டு சிகிச் சைக்காக புதுக்கோட்டை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பணியை செய்தவர்கள் காவலர் களும் தீயணைப்பு துறையினரும் ஆவர்.

பார்ப்பான் யாரும் பக்கத்தில் வர வில்லை. கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலாக இருந்தபோதிலும் புதிய தேர் அண்மைக்காலத்தில் தான் இருபது லட்ச ரூபாய் செலவில் அதிமுக ஆட்சி காலத்தில்தான் தேர் செய்யப் பட்டது.

தேர்ச் சக்கரங்களையும் இணைக்கும் இணைப்பு சரியாக பொருத் தப்பட வில்லை. போல்ட் நட்டு போடப்பட வில்லை. கயிறு கட்டியும் இணைக்க வில்லை. இதைக் கவனிக்காத கோவில் நிர்வாகமும் பராமரிக்க வேண் டிய பொதுப்பணித் துறையும் கவனிக்கத் தவறியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. கோயில் நிர்வாக அலுவலர் ஞாயிற்றுக்கிழமை என்ப தால் விடுப்பில் சென்றுவிட்டார். அதே போல் யாரோ ஓர்அதிகாரி இந்த தேர் நன்றாக இருக்கிறது என்று சான்றிதழும் கொடுத்து சென்றிருக்கிறார்.

அவர்களுக்கு எல்லாம் தெரியும் “கடவுளர்‘ சக்தி இல்லை என்று. 

பாவம் அப்பாவி பொதுமக்கள்.

No comments:

Post a Comment