பெங்களூரு ஈத்கா மைதானத்தில் பிள்ளையார் சதுர்த்தி விழா நடத்தக் கூடாது : உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

பெங்களூரு ஈத்கா மைதானத்தில் பிள்ளையார் சதுர்த்தி விழா நடத்தக் கூடாது : உச்சநீதிமன்றம்

பெங்களூரு, ஆக.31 பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த மைதானம் அரசுக்கு சொந்த மானது என கருநாடக அரசு அண்மையில் அறிவித்தது.

இதையடுத்து சுதந்திர தினத் தின்போது பலத்த காவல்துறை பாதுகாப்புடன் முதல் முறையாக அங்கு தேசியக் கொடி ஏற்றப் பட்டது. இந்நிலையில், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஈத்கா மைதானத்தில் பிள்ளையார் சதுர்த்தி பந்தல் வைக்கப்போவதாக அறிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த‌ எஸ்டிபிஅய் கட்சியினர், அதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக வும் எச்சரித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே ஈத்கா மைதானத் தில் பிள்ளையார் சதுர்த்தி கொண் டாட கருநாடக அரசு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து கருநாடக வக்பு வாரியம். கருநாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்க முடி யாது என தெரிவித்தது. இதை எதிர்த்து கருநாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஏ.எஸ். ஓகா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று (30.8.2022) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''ஈத்கா மைதா னத்தில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட வழங்கப்பட்ட அனு மதி ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரங்களுக்கு முன்பு அங்கு நிலவிய சூழலையே தொடர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.


No comments:

Post a Comment