திருச்சி, ஆக. 4- பெரியார் மருந்தியல் கல்லூரியின் அலுவலகப் பணியாளர் மறைந்த திருமதி கே. சின் னப்பொண்ணு அவர்க ளுக்கு முதல்வர் முனை வர் இரா. செந்தாமரை அவர்கள் தலைமையில் 1.8.2022 அன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இதில் பெரியார் மருந் தியல் கல்லுரியின் முதல் வர் முனைவர் இரா. செந் தாமரை, பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ் மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திருமதி சின்னப் பொண்ணு அவர்கள் பணியாற்றிய மாண் பினையும் அவர்தம் சுறு சுறுப்புடன் கூடிய கடின உழைப்பு, நேர்மை, அர்ப் பணிப்புணர்வு, காலம் பாராத பணி போன்ற வற்றை எடுத்துரைத்தனர்.
மேலும் பெரியார் கல்விக்குழும நிர்வாகத் தின் மீதும் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் மீதும் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையி னையும் தெரிவித்து அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தின ருக்கு பெரியார் மருந்தி யல் கல்லூரியின் சார்பி லும் நிர்வாகத்தின் சார்பி லும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட னர்.
அதனைத்தொடர்ந்து பேராசிரியர்கள், பணியா ளர்கள் மற்றும் மாணவர் கள் ஒருநிமிடம் அமைதி காத்து மறைந்த திருமதி சின்னப்பொண்ணு அவர்களுக்கு வீரவணக் கத்தை செலுத்தினர்.
No comments:
Post a Comment