சென்னை, ஆக. 23- தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர், செருமனி நாட்டைச் சார்ந்த சுபாஷினி அவர்கள் தம் குழுவினரோடு ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று, வடசென்னையில் இருக்கின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பார்வையிடத் திட்ட மிட்டு, அதன்படி தங்கள் குழுவினரோடு காலை 6 மணிக்குத் தொடங்கி வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டு, பிற்பகல் 2:30 மணியளவில் பெரியார் திடலுக்கு வந்திருந்தனர்.
கோ. ஒளிவண்ணன், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகி யோர் வந்திருந்தவர்களை வர வேற்றனர்.
பிரின்சு என்னாரெசு பெரியார் முதலாவதாகப் பெரியார் திடலில் அமைந்துள்ள பல்வேறு அமைப்புகளைப் பறவைப் பார்வையில் விவரித்தார். திடல் உருவான வரலாற்றை விளக்கத் தொடங்கியவுடன் வந்திருந்தவர் களிடையே உற்சாகம் தொற்றிக் கொண்டது.
பின் அருங்காட்சியகத்துள் மாட்டியுள்ள படங்களையும் ஓவியங்களையும் முதலில் மேலோட் டமாகக் குறிப்பிட்டு விட்டு, பின் ஒவ்வொன்றின் வரலாற்று நிகழ்வுகளை விளக்கும்போது ஒரு நூறாண்டு வரலாற்றைக் குழுவினர் அறிந்து கொள்ள முடிந்தது.
பிறகு அய்யா பெரியார், அம்மா நினைவகங்கள் - அங்கே அய்யாவின் இறுதி நாட்களைச் சொல்லும்போது கண்கள் கசிந்துருகின. அம்மாவின் தன் னலமற்ற சேவை, ராவண லீலா போன்றவற்றை விவரிக்கும் போது ஆச்சரியத்தோடு கேட்ட னர். அய்யாவின் எழுத்துச் சீர் திருத்தத்தை விளக்கியபோது தமிழ் மரபுக் குழுவினர் வியந்தனர்.
குழுவினர் தங்கள் அய்யங் களைப் போக்கத் தொடுத்த வினாக்களுக்குப் பொறுமையா கப் பதில் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்து, குழுவை அழைத்து வந்த அதனுடைய தலைவர் சுபா ஷினி அவர்களுக்குப் பயனாடை அணிவிக்கப்பட்டு நன்றி கூறப் பட்டது.
சுபாஷினி, தான் இதுவரை சென்றிருந்த ஆயிரத்திற்கும் மேலான அருங்காட்சியகங் களில், சுவீடன் நாட்டிலுள்ள நோபல் பரிசு அருங்காட்சியகம் சிறப்புமிக்க ஒன்று எனவும் அங் கிருந்த பொறுப்பாளர் எப்படி மிகவும் சிரத்தை எடுத்துரைப் பாரோ, அதைப்போல ஈடுபாட் டுடன் இன்று பல்வேறு செய்தி களை எடுத்து இயம்பினர் என வும் புகழ்ந்து பாராட்டி, தான் எழுதிய நூல்களை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு பிரின்சு என்னாரெசு பெரியார் வழியாக வழங்கினார்.
வந்திருந்த 40க்கும் மேற்பட்ட குழு நண்பர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு செய்திகளை, குறிப்பாகத் திரா விட இயக்கம் மற்றும் தமிழ்நாடு வரலாறு, அய்யா பெரியாரின் அரும்பணிகள், அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் அவர்களுடைய செயற்கரிய செயல்கள் இவற்றை விரிவாக அறிந்து கொண்டனர்.
வந்திருந்த இக்குழுவினர் பல தரப்பட்டவர்கள். முனைவர் பட் டம் பெற்றவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், தொல்லியல் துறை சார்ந்தவர்கள் என பல் வேறு துறைகளில் இயங்குபவர் கள். வந்திருந்தவர்களில் ஓரிரு வர் தவிர மற்றவர்கள் அனைவ ருமே முதன்முறையாகத் திட லுக்கு வருபவர்கள்.
பயணத் திட்டத்தில் அடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை மறந்து, குழுவாகப் ஒளிப்படங்கள் எடுத்துக் கொள் வதும், சுயமி எடுத்துக் கொள் வதும் எனத் திடலை விட்டுப் பிரிய மனமில்லாமல் வலம் வந்தனர். இறுதியில், இன்றைக்கு இந்த நினைவுகளையே சுமந்து செல்வோம் என்று அடுத்த திட்டத்தைத் துறந்தனர்.
இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடப்பதற்காக பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் அவர்கள் பெரும் சிரத்தை எடுத்துக் கொண் டார். அனைவரையும் ஒருங்கி ணைத்து இந்நிகழ்ச்சி நடக்கக் காரணமாக இருந்த பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் எமரால்ட் கோ.ஒளி வண்ணன் நன்றி கூறினார். கலைமணி ஒருங்கிணைப்பில் உதவினார்.
No comments:
Post a Comment