சென்னை, ஆக. 30- உணவு அறிவியலில் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் அடிப்படையில் உடல் ஆரோக்கியத்திற்கான - இயற்கையாக தயாரிக்கப் பட்ட உணவு வகைகளை 'சுப்ரீம் பார்மா' நிறுவனம் நுகர்வோர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் வணிக ஆலோசகர் சிறீவத்சன் ஆத்தூர் அவர்கள் கூறியிருப்பதாவது: மக்கள் உணவு உட்கொள்வதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்தும் குறிக்கோளுடன் இந்த உணவுகளை அறிமுகம் செய்துள்ளோம். இந்த சுப்ரீம் இயற்கை உணவுகளில் நிலைப்படுத்தப்பட்ட வைட்டமின்கள், சத்து நிறைந்த சாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்நிறுவனம் பல்வேறுபுதிய ஆரோக்கியமான உணவுகள் குறித்தும் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை மண்டலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை யகங்களில் இந்த உணவு பொருள்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment