ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் பவளப்பாறை பல ஆண்டுகளில் இல்லாத அளவில் வளர்ந்துள்ளது
யுனெஸ்கோ மரபுடைமை தலமாகக் கருதப்படும் அந்தப் பவளப்பாறை, கடந்த 36 ஆண்டுகளாக இவ்வளவு வளர்ச்சி பெற்றதில்லை என்று ஆஸ்திரேலியக் கடல் அறிவியல் நிலையம் குறிப்பிட்டது.
பவளப்பாறையின் வடக்கு, மத்தியப் பகுதிகளில் இருக்கும் 87 இடங்களை ஆராய்ந்துபார்த்த அறிவியல் ஆய்வாளர்கள், பாறை எதிர்பார்த்ததைவிட விரைவில் பாதிப்பிலிருந்து மீண்டுவந்திருப்பதாகத் தெரிவித்தனர்.
அங்கு அதிவேகத்தில் வளரும் அக்ரோபோரா எனும் கிளைகளாக வளரும் பவளப்பாறை இனத்தின் காரணமாகப் பாறை புத்துயிர் பெற்றிருப்பதாகக் கூறப்படு
கிறது. அதன்மூலம் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் உயிர்வாழ்கின்றன.
அதிகளவில் பாதிப்பும் தொல்லையும் இல்லாமல் இருந்தால் அழிவின் விளிம்பில் இருக்கும் பவளப்பாறைகள்கூட அதிவேகத்தில் புத்துயிர் பெறலாம் என்பதை அண்மைய நிலவரம் காட்டுகிறது.
No comments:
Post a Comment