’விடுதலை’ வரலாற்றில் ஆசிரியர் பதித்த வரலாற்றுச் சுவடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

’விடுதலை’ வரலாற்றில் ஆசிரியர் பதித்த வரலாற்றுச் சுவடுகள்

 ‘விடுதலை’ மலர்கள்

தந்தை பெரியார் 78ஆம் ஆண்டு பிறந்த நாளான 1956ஆம் ஆண்டு செப்டம்பர் 17இல் தந்தை பிறந்த நாளையொட்டி 'விடுதலை' மலர் வெளிவந்தது. அதன் விலை 4 அணா. அன்றைய தலையங்க ஆசிரியர் எஸ்.குருசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு விடுதலை ஆசிரியராக கி.வீரமணி அவர்கள் பொறுப்பேற்றதி லிருந்து 1962ஆம் ஆண்டு முதல் (தந்தை பெரியார் 84ஆம் ஆண்டு பிறந்த நாள்) தொடர்ந்து பெரியார் பிறந்தநாள் மலர் வெளியிடப்பட்டு வருகிறது.

விடுதலை காலண்டர்

1966ஆம் ஆண்டு விடுதலை காலண்டர், அய்யா அவர்களின் பல்வேறு கோணங் களின் உருவந்தாங்கி பல வண்ணங்களில் ஆஃப்செட்டில் அச்சிட்டு விற்கப்பட்டது.

விக்டோரியா 820

கிழக்கு ஜெர்மனியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்ட விக்டோரியா 820 என்ற புதிய அச்சு இயந்திரத்தில் விடுதலை 4.11.1969 முதல் அச்சிடப்பட்டு வெளிவரத் துவங்கியது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு என்.வி.நடராசன் தலைமையில், தந்தை பெரியார் முன்னி லையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்பு மிகு டாக்டர் கலைஞர் இயக்கி வைத்தார்.

தணிக்கை

இந்திய நடுவணரசு நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்து பத்திரிகைகளுக்குக் கடுமையான தணிக்கையைக் கொண்டு வந்தது. அதன்படி 1.2.1976 முதல் விடுதலை ஏடும் கொடிய தணிக்கைக்கு இலக்கானது.  தணிக்கைத் தலைமை அதிகாரியும் அலுவலர்களும் முழுக்க முழுக்கப் பார்ப்பனர்களாக இருந்து இனவெறியுடன் 'விடுதலை'யிடம் நடந்து கொண்டனர். ஓராண்டு காலம் அதற்கும் ஈடுகொடுத்து தனது பீடுநடை பயணத்தை விடுதலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை சென்னை பெரியார் திடலில் நடத்திட அனுமதி அளிக்க மறுத்த நெருக்கடி கால அரசு, அன்னை மணியம்மை யார் அவர்களையும், புலவர் கோ.இமயவரம் பன் அவர்களையும் 16.9.1976 அன்று காலை 5.30 மணிக்குக் கைது செய்தது;  கைது செய்யப்பட்ட செய்தியைக் கூட ‘விடுதலை’யில் வெளியிடவும் அனுமதி மறுத்துவிட்டது.  

வாங்கலாம்

விடுதலை, உண்மை ஏடுகளை ஊராட்சி ஒன்றிய சமூகக் கல்வி மய்யங்கள். நகராட்சி வாசகச் சாலைகள் ஆகியவற்றில் சந்தா செலுத்தி வாங்கலாம் என அரசாணை எண் 1549 (ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை) மூலம் 29.4.1973 அன்று தமிழ்நாடுஅரசு ஆணையிட்டது.

சட்டமன்றத்தில் 'விடுதலை’

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக் கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி விடுதலை எழுதிய தலையங்கத்தை சட்டமன்றத்தில் உழைப்பாளர் முன்னேற்றக் கட்சி உறுப்பினர் மார்க்கபந்து படித்துக்காட்டி வலியுறுத்தினார். (6.8.1977)

விடுதலை நிறுத்தம்

14.01.984 முதல் சென்னை மாவட்ட நூலகங்கள் 703க்கும் போடப்பட்டிருந்த விடுதலை இதழை தமிழ்நாடு அரசுரத்துச் செய்துவிட்டது.

சட்டமன்றத்தில் கேள்வி

“எதிர்க்கட்சி ஏடுகளையெல்லாம் நூலகங்களில் நிறுத்தினீர்கள். எல்லா ஏடுகளையும்தான் நிறுத்தினீர்கள், விடுதலையையாவது போடக்கூடாதா?” என்று சட்டமன்றத்தில் (3.08.1984) தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன் வினா எழுப்பினார். சிறைகளில் விடுதலை ஏடு வாங்க தமிழ்நாடு அரசு விதித்த தண்டனையை எதிர்த்து விடுதலை ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களால் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 14.02.1983 அன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

27.11.1987 அன்று உள்துறை தனிச்செயலாளர் ஆணையின்படி தடை நீக்கப்பட்டதால், வழக்கு விசாரணை தொடர்ந்து தேவை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய தேவ் தீர்ப்பளித்தார்.

1.4.1983 முதல் விடுதலைக்கு யு.என்.அய். செய்தி நிறுவனத் தொடர்பு ஏற்பட்டது. டெலிபிரிண்டர் 10.5.1983 முதல் விடுதலையில் இயங்கத் துவங்கியது.

ஆஃப்செட்டில் விடுதலை

56 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விடுதலை 7.06.1990 முதல் ஆஃப்செட் முறையில் அச்சிடப்பட்டு வெளிவரத் துவங்கியது. 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நான்கு வண்ணம்வரை அச்சிடத் தகுதியுள்ள அக்கியமா (AKIYAMA)என்கிற அச்சு இயந்திரம் விடுதலைக்குச் சொந்தமானது. இதனை அன்றை தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார்.

விடுதலை ஞாயிறுமலர்

விடுதலை நாளேட்டோடு சேர்ந்து 4 பக்கம் கூடுதலான அளவில் விடுதலை ஞாயிறுமலர் 18.08.1991 முதல் வெளிவந்தது; நன்கொடை ரூ.1.50 3.11.1991 முதல் 8 பக்கங்கள் கொண்ட தனி விடுதலை ஞாயிறு மலராக வெளிவந்தது. பின்னர் தனி நன்கொடை இல்லாமல் விடுதலை ஏட்டுடன் இணைப்பாக வெளிவருகிறது.

புதிய அச்சு இயந்திரம்

‘விடுதலை’க்கு ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட்ட Po24 Germany polyGraph-planeta என்னும் புதிய அச்சு எந்திரம்  28.12.2000 முதல் செயல்படத் தொடங்கியது. இதனை அன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத் தலைவர் ஜி.கே.மூப்பனார் இயக்கி வைத்தார்.

புதிய வெப் ஆப்செட்டில் விடுதலை

ஒரே நேரத்தில் 8 பக்கங்கள் (இரண்டு பல வண்ணப் பக்கங்கள்) அச்சிட்டும் அதனை மடித்தும் தரக்கூடிய தொழில் நுட்பங்களைக் கொண்ட புதிய  'வெப்-ஆஃப்செட்' எந்திரமான Naph-web offset printing machine 8.3.2003 அன்று சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களால் இயக்கி வைக்கப்பட்டது..

விடுதலை இரண்டாம் பதிப்பு

திருச்சியில் விடுதலை இரண்டாம் பதிப்பு தந்தை பெரியார் 129 ஆம் ஆண்டு பிறந்த நாளில் திருச்சி பெரியார் மாளிகையில் 16.9.2007 அன்று தொடங்கப்பட்டது.. விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட மாண்புமிகு போக்குவரத்துத்துறை  அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்

விடுதலை நூலகங்களில் நிறுத்தம்

அ.இ.அ.தி.மு.க. 2011இல் ஆட்சிக்கு வந்தவுடன் வாங்குவது நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் துக்ளக் உள்ளிட்ட பல பத்திரிகைகள் நூலகங்களுக்கு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆசிரியர் பணியில் பொன்விழா நிகழ்வு 50,000 விடுதலை சந்தாக்கள் 

1962இல் விடுதலையின் பொறுப்பேற்ற ஆசிரியர் 2012 இல் தமது ஆசிரியர் பணியின் பொன்விழாவைக் கொண்டாடினார். இவ்விழா சிறப்பாக பெரியார் திடலில் நடைபெற்றது. முத்தமிழ் அறிஞர் டாக்ர் கலைஞர் மற்றும் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் பங்கேற்றனர். இவ் விழாவில் 50,000 விடுதலை சந்தாக்கள் தோழர்களால் திரட்டப்பட்டு வழங்கப்பட்டன.  

No comments:

Post a Comment