சென்னை சென்சஸ் ஓபிசி சங்கம் சார்பில் ராஜாஜி பவன் வளாகத்தில் சமூக நீதி குறித்த கூட்டம் நடை பெற்றது. சென்சஸ் ஓபிசி சங்கத் தலைவர் செல்வி மேரி செலன் தலைமை வகித்தார். செயலாளர் ஜி.ராஜ்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்ட மைப்பின் நிர்வாகிகள் ஏ.ராஜசேகரன், ரகமத் ராஜா, யூனியன் வங்கி டி.ரவிக் குமார், கே.சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
”சுதந்திரத்திற்குப் பின் சமூக நீதி” என்ற தலைப்பில் பிற் படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலா ளர் கோ.கருணாநிதி உரையாற்றினார். ராஜாஜி பவன் வளாகத்தில் முதன் முறையாக திறந்த வெளி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment