உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்
சென்னை, ஆக. 7- பெரியார், வள்ளலார் ஆகி யோரிடமிருந்து, பிறருக்கு உதவும் பண்பைக் கற்றுக் கொண்டோம்; தமிழ்நாடு பல்வேறு சமுதாய சீர்திருத்தங்களின் வளமான வர லாற்றை அளித்து முன்னோடி மாநிலமாக உள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார்.
நேற்று (6.8.2022) சென்னையில் நடை பெற்ற மனித உரிமைகள் ஆணைய வெள்ளி விழாவில் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது:
மற்ற மாநிலங்களை விட ஆதிதிரா விட இனத்த வர்க்கு அதிகாரம் அளிக்கும் நிலையை தமிழ் நாட்டில் தான் துவக்கப் பட்டுள்ளது. சமூக சீர்த் திருத்த இயக் கங்களை தமிழ்நாடு அளித்துள்ளது. நீதிமன் றங்கள் சிலசமயம் விரைந்து முடிவெடுக்க முடியாத நிலையில் மாநில மனித உரிமை ஆணையம் தான் தனிப்பட்டவர்க்கும், மாநில அரசுக்கும் பாலமாக நின்றுள்ளது. இது ஒரு தனித்துவம் மிக்க ஒன்றா கும்.
மனித உரிமைகள்
மனித உரிமைகள் தொடர்பாக நாங்கள் தீவிரமாக செயல்படும் பொழுது எங்களுக்கு உறுதுணையாக இருப்பது வள்ளலார் மற்றும் தந்தை பெரியாரின் அறிவுரைகள்தான். பெரும் அன்போடு அடுத்த வர்களை நேசித்து அவர்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என் கிற எண்ணத்தை அவர்களிடம் நாங்கள் கற்றது எங்களின் நல்வாய்ப்புதான் என்று குறிப்பிட்டார்.
அதிகாரம் பெறுவதற்கு முக்கிய பங்காற் றுவது கல்விதான். பெண்களுக்கான உரிமை கள் பற்றி நான் பேசும் போது அங்கே கல்வி தான் முன் நிற்கிறது. பெண்களுக்கான கல்வியால் அவர்களுக்கு அவர்கள் குடும்பச் சொத்தில் சம உரிமை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. நீதித்துறையை பொறுத்தவ ரையில் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் ஏற்கெ னவே பெண்களாக உள்ளனர். இட ஒதுக்கீட் டின் அடிப்படையில் இல்லாமல் அவர்களுக் கான கல்வித் தகுதியில் அவர்கள் நீதிபதிகளாக இடம் பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர் மற்ற மாநி லங்களில் உள்ள உயர்நீதி மன்றங் களில் இருக்கும் நீதிபதிகளைக் காட்டிலும் சென்னை உயர்நீதி மன் றத்தில் அதிகளவில் பெண் நீதிப திகள் இருப்பது பாராட்டத்தக்கது என்றும்
“தமிழ்நாடு பல்வேறு சமூக சீர் திருத்த இயக்கங்களின் வளமான வரலாற்றை நமக்கு அளித்துள்ளது. இன்றைக்கு நமது மனித உரிமை நடைமுறையில், பிறர் மீது மிகுந்த அன்புடன் பிறருக்குச் சேவை செய்யக் கற்றுக் கொடுத்த வள்ளலார், பெரியார் போன்ற மாமனிதர்களின் கருத்துக்களில் தோளோடு நிற்கும் பெருமை நமக்குக் கிடைத் திருக் கிறது” என்றும் அவர்குறிப்பிட்டார்.
நீதிபதி சஞ்சய் கஷின் கவுல் அவர்களின் உரை வருமாறு :மனித உரிமை ஆணையங்க ளுக்கு பல்வேறு பொறுப்புகள் இருக்கின்றன. இந்த ஆணையம் 25 ஆண்டுகளை கடந்துள்ளது. அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளையும் பெற்றுள் ளன. மனித உரிமைகளுக்கு பிரச் சினைகள் எழும்போதெல்லாம் அதை ஆழ்ந்து கவனித்து முடி வெடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கின்றன.
என்னைப் பொறுத்தவரையில் அப்படிப்பட்ட சூழலில் எனக்குப் பெரும் உதவிக்கரமாக இருப்பது திருக்குறள் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தக் குறள்
“நயன்உடையான் நல்கூர்ந் தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு.'' அதாவது ஒப்புரவாகிய நற் பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந் துகின்ற தன்மையாகும் என்பது அதன் பொருளாகும்.
சமூகநீதி
மனிதாபிமானமிக்க சமூதாயத் தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வகையில் சமநீதி வழங்க வேண்டும் என்பது மிக அத்தியா வசியமான ஒன்றாகும். தீண்டா மைக்கு எதிரான நிலை ஆட்சி யில் உரிமை போன்றவைகள் அரசியல் சட்டத்திலேயே வழங் கப்பட்டுள்ளது. இதைத்தான் சமூ கநீதி என்று சொல்லப்படுவதா கும். அனைவருக்கும் சமநீதி வழங்க வேண்டும் என்பதுதான் அரசியல் சட்டத்தின் குறிக்கோ ளாகும். பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையில் மனித உரி மைகளுக்கு சவால்கள் எழுந்தா லும் அதை முறையாக கண்கா ணித்து தீர்வு காணப்பட்டு வருவதை நாம் அறிவோம். அடுத்த தலைமுறையினர் அவர்கள் ஆண்களாக இருக்கட் டும் அல்லது பெண்களாக இருக் கட்டும் அவர்கள் சமமாக எதிர் கால வளர்ச்சிக்கேற்ப அவர்களது பெற்றோர்களால் வளர்க்கப் பட்டு வருகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
மகளிர் கல்வி
மகளிர் கல்வியில் முன்னேற் றம் அடைவதன் மூலம் அவர்க ளின் குடும்ப சொத்துக்களின் சமஅளவு பங்கு பெறுகிறார்கள். உயர்பதவியும் வகிக்கிறார்கள். இன்றைக்கு அவர்களில் பலர் நீதிபதிகளாகவும் பதவி வகித்து வருகிறார்கள். இந்த நாட்டி லேயே அதிக பெண் நீதிபதிகள் கொண்ட உயர்நீதி மன்றமாக சென்னை உயர்நீதி மன்றம் விளங்குகிறது என்பதில் எனக் குப் பெரும் மகிழ்ச்சி. வாய்ப்பு அமைந்தால் அவர்கள் நீதித் துறையில் மேலும் மிகப்பெரிய அதிகாரம் அளிக்கும் பொறுப் பில் வருவார்கள் என்பது திண் ணம். இன்றைக்கு நிலவும் இந்த நிலை உடனடியாக ஏற்பட்டு விடவில்லை . தமிழ்நாடு உள் ளிட்ட சில மாநிலங்களில் முன் னதாகவும் மற்ற மாநிலங்களில் அதை தொடர்ந்தும் மனிதஉரி மையை நிலைநாட்டும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்திய அர சியல்சட்டம் என்பதுமிகப்பெரிய சமூக ஆவணமாகும். நாட்டுக்கு வழிகாட்டும் வகையில் அரசி யல் சட்டம் இருந்து வருகிறது. அதற்கு நீதித்துறை உறுதுணை யாக விளங்கி வருகிறது.
மனித உரிமைகளை பாதுகாக் கும் வகையில் இதுபோன்ற மாநில மனித உரிமை ஆணை யங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. சமூக அரசியல் உரிமைகளை நிலை நாட்டுவதையே மிக முக்கியமாக மனித உரிமை ஆணையங்கள் கொண்டுள்ளன. நீதித்துறை சில சமயம் விரைந்து செயலபட இய லாத நிலையில் இதுபோன்ற மனித உரிமை ஆணையங்கள் தனிப்பட்டவர்களுக்கும் சமுதா யத்திற்கும் உதவும் வகையில் விளங்குகின்றன என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக மனித உரிமை மீறல்களை தாமாக முன்வந்து வழக்காக எடுத்து அதுபற்றி விசா ரணை நடத்தி தீர்வு காண்பதை குறிப்பிட விரும்புகிறேன். காவல்துறை காவலில் சட்டத்திற்கு புறம்பாக கைதிகள் அடித்துக் கொல்லப்படுவது இந்த ஆணை யத்தின் நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டு வருகிறது என் பதை குறிப்பிட விரும்புகிறேன். மனித உரிமைகள் என்பது வெறும் காகிதத்தால் இல்லாமல் உண்மையான செயல் வடிவில் இருக்க வேண்டும் என்பதையே அரசியல் சட்டமும் வலியுறுத்து கிறது. மனித உரிமைகள் எதை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றது என்று பார்த்தால் சமீபத்தில் சுற்றுச்சூழல்கள் நிலைமைகளை அடிப்படையா கக் கொண்டு அது இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆலோசனையாக இருக்கும்.
பெரியார், வள்ளலார்
தமிழ்நாடு பல்வேறு சமுதாய சீர்திருத்த இயக்கங்களின் வளமான வரலாற்றை நமக்களித்து அதன் முன்னோடியாகவும் இருந்து வருகிறது. அதன் கார ணமாக சமுதாய உரிமைகளை பாதுகாக்க ஏதுவாக இருக்கிறது. அதிகமாக நேசித்து அடுத்தவர் களுக்கு உதவ வேண்டும் என் கிற உயரிய கோட்பாட்டை வள் ளலார் மற்றும் பெரியார் அவர்களிடம் நாம் கற்றுக் கொண்டோம் என்பதை பெரு மையாக எடுத்துக்கொள்கிறேன். அவர்களின் கருத்துக்களில் தோளோடு நிற்கும் பெருமை நமக்குக் கிடைத்திருக்கிறது.
மனித உரிமை ஆணையம் மக்களுக்கு எதிரான செயல்பாடு களை தடுப்பதை மிகப்பெரிய கடமையாகக் கொண்டுள்ளது. மனித உரிமைகளை காப்பதில் இது போன்ற ஆணையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின் றன என்பது குறித்து நான் மிக்கப் பெருமைப்படுகிறேன். அரசி யல் சட்டத்தின் அடிப்படையில் தனி மனித உரிமைகள், சுதந்தி ரம் காக்கப்பட வேண்டும் என் பது மிக முக்கியம். நம் போன்ற ஜனநாயக நாடுகளுக்கு அது இன்றியமையாத ஒன்றாகும். மக் களுக்கு எதிரான நடவடிக்கை களை முற்றிலுமாக கட்டுப்படுத் துவதில் இது போன்ற ஆணை யங்கள் தொடர்ந்து சீரிய முறை யில் செயல்படும் என்று நான் நம்புகிறேன்.
வறுமை, சமத்துவமின்மை இவைகளுக்கு எதிராக மனித உரிமை ஆணையங்கள் செயல் பட்டு வருவது குறித்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சமூ கப் பொருளாதார நிலைமை களை சீர்தூக்கி செம்மையாக செயல்பட தமிழ்நாடு குறிப்பாக சென்னை எனக்குப் பலவகையி லும் உதவிகரமாக இருந்து வரு கிறது என்று குறிப்பிடுவதில் நான் பெருமை அடைகிறேன்.
இவ்வாறு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உரையாற்றினார்.
No comments:
Post a Comment