தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ‘Search for doctor’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பதிவு பெற்ற மருத்துவர்களை எளிதாக கண்டறிய இந்த செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
அஞ்சல் குறியீட்டு எண், நீங்கள் வசிக்கும் பகுதியை வைத்து செயலியில் தேடினால் அந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் பட்டியல் கிடைக்கும். மருத்துவர் பெயர், படிப்புத் தகுதி, அனுபவம், அவர்கள் எந்த துறை வல்லுநர் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் பொதுமக்கள் அவசர காலம், பயணத்தின்போது தங்களுக்கு அருகில் உள்ள மருத்துவர்களை எளிதாக கண்டறிய முடியும்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் 1 லட்சத்து 66 ஆயிரம் மருத்துவர்கள் உள்ளனர். இதில் தற்போது 80 ஆயிரம் மருத்துவர்கள் செயலியில் இணைந்துள்ளனர். மற்றவர்களும் விரைவில் இணைவார்கள் என்று மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த செயலி மூலம் முறையாக மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவம் செய்பவர்கள் கண்டறிந்து தடுக்க உதவும். பொதுமக்கள் தகுதியான, பதிவு பெற்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதை இதன் மூலம் உறுதி செய்ய முடியும் ” என்றார்.
No comments:
Post a Comment