ம.பி.யில் வியாபம் முறைகேடு போன்று குஜராத்தில் அரசுப் பணி தேர்வுகளில் முறைகேடு : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

ம.பி.யில் வியாபம் முறைகேடு போன்று குஜராத்தில் அரசுப் பணி தேர்வுகளில் முறைகேடு : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

பாவ்நகர், ஆக.25- குஜராத்தில் அரசுப் பணி தேர்வுகளில் மாபெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன; ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இந்த முறைகேடுகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்படும்' என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் டில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

டில்லி அரசின் கலால் கொள் கையில் முறைகேடுகள் நடைபெற்ற தாக சிபிஅய் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், குஜ ராத் பாஜக அரசுக்கு எதிராக இக் குற்றச்சாட்டை அவர் முன் வைத்துள்ளார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறு தியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதை யொட்டி ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வப்போது குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டு பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். பாவ்நகரில் 23.8.2022 அன்று நடை பெற்ற இளைஞர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: 

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற வியாபம் (மாநில தொழிற்கல்வி தேர்வு வாரியம் முறைகேடு) போன்று குஜ ராத்தில் அரசுப் பணி தேர்வுகளில் மாபெரும் முறைகேடுகள் நடை பெற்றுள்ளன. இத்தேர்வுகளின் வினாத்தாள் கசியவிடப்படுவது கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து தொடர்கதையாக உள்ளது. இந்த முறைகேட்டுக்காக இதுவரை யாரா வது சிறை சென்றுள்ளார்களா? ஆனால், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இந்த முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும். முறைகேட்டில் ஈடு பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக் கும் வகையில் சட்டம் இயற்றப்படும்.

அரசுப் பணி தேர்வுகளையே முறை யாக நடத்த முடியாதவர்கள் ஆட்சியை முறையாக நடத்து வார்களா? ஆம் ஆத்மியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தால், அரசுப் பணி தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வோம். ஒவ் வொரு இளைஞருக்கும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றார் அவர்.

இந்தக் கூட்டத்தில் கெஜ்ரிவா லுடன் டில்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவும் உடனி ருந்தார்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2013-இல் வெளிவந்த வியாபம் முறைகேடு விவகாரம், அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது மாண வர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்புள் ளதாகக் கூறப்படும் இந்த முறைகேடு வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த 2015-இல் சிபிஅய் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆம் ஆத்மியைக் கண்டு பா.ஜ.க. அஞ்சுகிறது 

ஆளும் பாஜக அரசிடம் இருந்து குஜராத் மக்கள் மாற்றத்தை விரும்பி ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதைத் தடுக்கவே டில்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஅய் விசாரணை நடத் துகிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பாஜக அஞ்சுகிறது. பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பாட்டிலை விரைவில் நீக்க உள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. அந்த அளவுக்கு பாஜக பயந்துள்ளது என்றார்.



No comments:

Post a Comment