தேசிய கல்விக் கொள்கையை கைவிடக்கோரி நாடாளுமன்றம் நோக்கி பேராசிரியர்கள் அணிவகுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

தேசிய கல்விக் கொள்கையை கைவிடக்கோரி நாடாளுமன்றம் நோக்கி பேராசிரியர்கள் அணிவகுப்பு


புதுடில்லி, ஆக. 6  தேசிய கல்விக் கொள்கையை (என்இபி) திரும்பப் பெறக்கோரி அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்பு (அய்பெக்டோ) நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்பு நடத்தியது. பேரணிக்கு அய்பெக்டோ தலைவர்களான கேஜிசிடி மாநில தலைவர் டாக்டர். பிபி பிரகாஷ், பொதுச் செயலாளர் டாக்டர் முஹம்மது ரபீக், அய்சிடிஓ தேசிய செயலாளர் டாக்டர் என். மனோஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறுதல், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் ஒதுக்கீடு, அதிகாரமயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.


No comments:

Post a Comment