மின்சாரம்
கேள்வி: செய்தித் தாள்களில் வரும் விமர்சனங்களையும், ‘துக்ளக்‘ போன்ற பத்திரிகைகளில் வரும் சாடல்களையும், கிண்டல், ஜோக்குகளையும் பற்றி அரசியல் வாதிகள் சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே?பதில்: மக்களே அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களுக்கு ஓட்டுப் போடும்போது அரசியல்வாதிகள், ஏன் கவலைப்படுவார்கள்? எனவேதான் ‘அய் டோன்ட் கேர்’ என்கிறார்கள் அவர்கள் (‘துக்ளக்‘, 10.8.2022 பக். 28).
ஆக ‘துக்ளக்‘ கும்பலின் அரட்டைக் கச்சேரிகளைப் பற்றி மக்கள் கவலைப் படவில்லை என்று தெரிந்தபிறகு ‘துக்ளக்‘ கும்பல் ‘தத்துப்பித்து’ என்று ‘அம்மண’ ஆட்டம் போடுவானேன்?
அப்படித்தான் 19.2.2020 ‘துக்ளக்கில்‘ (பக்கம் 29) ஒரு கேள்வி பதில்:
கேள்வி: தமிழக மக்கள் எந்த விஷயத்தில் தனித்துவம்?
பதில்: ஆன்மிகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிட கழகங்களுக்கு வாக்களிப்பது - அவர்களது தனித்துவம்.
இதுதான் தெரிகிறதே - பிறகு எதற்கு ஒவ்வொரு இதழிலும் ஓட்டை வாய்க் கூச்சல்?
- - - - -
அரசியலில் நான் தரகு வேலைக்காரன் - சோ.ராமசாமி (‘ஆனந்த விகடன்’, 1.3.2012)
“என் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்டதில்லை. என்னிடம் ஆலோசனை கேட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று உங்களுக்குத் தெரியும்."
“ஜிலீமீ ழிணீனீமீ வீs ஸிணீழீவீஸீவீரீணீஸீபீலீ” நூல் வெளியீட்டு விழாவில் சோ.ராமசாமி (2008 மார்ச்சு).
- - - - -
பாரதியார் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடவில்லை.
(‘துக்ளக்‘, 4.11.2020 பக்கம் 25)
- - - - -
நான் பிராமணன் - அதுவும் இன்றைய பிராமணன்தான் - அசல் பிராமணன் இல்லை. - சோ.ராமசாமி (‘ஆனந்த விகடன்’, 1.2.2012)
கேள்வி: இலவசங்களைக் கொடுத்து ஓட்டு வாங்கிடலாம் என்ற அரிய தத்து வத்தை முதலில் கண்டுபிடித்த ஜீனியஸ் காங்கிரஸா? திமுகவா?
பதில்: இவர்கள் யாருமில்லை. விபூதி, குங்குமத்தோடு நிற்காமல், புளியோதரை, வெண் பொங்கல்ன்னு இலவசமா கொடுத்தா பக்தர்கள் வருவாங்கன்னு கண்டுபிடிச்சது கோயில்தான் (சோ - ‘துக்ளக்‘, 20.6.2012).
கேள்வி: சென்னை தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து?
பதில்: ‘இவ்வளவு கட்டணம் கொடுத் தால் வெங்கடேசப் பெருமாளை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து, ஒரு நாள் தங்க வைக்கிறோம்‘ என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறை.
(சோ ‘துக்ளக்‘, 23.4.2006, பக். 17)
கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?
பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய்ச் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்குப் பொய்யை அருள் வாக்காக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையி லேயே நடிக்கத் தெரிய வேண்டும்.
- (சோ ‘துக்ளக்‘, 26.10.2016, பக். 23)
கேள்வி: ‘துக்ளக்‘ பொன்விழா மலரில் தி.க.வின் வீரமணி சோவைப் பற்றி பண் பாடு நிறைந்த மனிதர் என்ற தலைப்பில் அற்புதமாக எழுதி இருப்பது பற்றி....
பதில்: அவரை சோ கடுமையாக எதிர்த் தும்கூட, அவர் சோவைப் புகழ்ந்து எழுதி யது அவருடைய கண்ணியத்தைக் காட்டு கிறது.
(குருமூர்த்தி ‘துக்ளக்‘, 19.2.2020, பக். 26)
No comments:
Post a Comment