தானே, ஆக.2 பா.ஜ.க.வுக்கு எதிராக சாமானி யர்கள் ஒன்றுபட்டால், அந்த கட்சியின் நாள்கள் எண்ணப்படுவது உறுதி என்று, நாட்டின் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் கூறியுள்ளார்.
மகாராட்டிரா மாநிலம் துலேவில் நடை பெற்ற கட்சிக் கூட்டத்தில் இதுதொடர்பாக சரத் பவார் பேசியிருப்பதாவது:
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப் பதால் பாஜக அதிகார ஆணவத்தை வெளிப் படுத்துகிறது. அதிகார ஆணவத்தை வெளிப் படுத்தும் பா.ஜ.க.வுக்கு பாடம் கற்பிக்கும் திறன் சாமானியனுக்கு உண்டு.
பா.ஜ.க.வுக்கு எதிராக சாமானியர்கள் ஒன்றுபட்டால், பா.ஜ.க.வின் நாள்கள் எண் ணப்படலாம். சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவருக்கு எதிராக தவறான வார்த்தைப் பிரயோகம் செய்து தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆனால் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மோசமான நடவடிக்கையில் இறங்கினர். ஆதிர்ரஞ்சன் சவுதிரி மற்றும் சிலர், சோனியா காந்தியைக் காப்பாற்றி சுப்ரியா சுலே சவுத்ரியை அவரது வாகனம் வரை அழைத்து சென்றார். இல்லை யெனில் அங்கு ஏதாவது நடந்திருக்கலாம். பாஜக-வின் அதிகாரத் திமிர் அது.
மகாராட்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த 2 ஆண்டுகளாக மாநில சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலை நடத்த அனுமதிக்கவில்லை. ஆனால், புதிய அரசு அமைந்த 2 நாள்களில் சட்டப் பேரவைத் தலைவர் தேர்தலை நடத்த அனுமதி அளித் தார். ஆளுநரின் நடத்தை இப்படி இருந்தால், ஜனநாயகத்தின் கதி என்னவாகும்? எனவே, ஜனநாயகத்தையும், அரசமைப்பையும் எந்த வகையிலேனும் பாதுகாப்பது நமது கடமை யாகும்.
இவ்வாறு சரத் பவார் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment