குறிஞ்சிப்பாடி, ஆக. 5- குறிஞ்சிப்பாடி பகுத்தறிவாளர் கழக சார்பில் பெரியார் கருத்தரங்கம் 2. 8 .2022 செவ்வாய் மாலை ஆறு மணி முதல் 9 மணி வரை ஆசிரியர் சீனிவாசன் திருமண மண்டபத்தில் மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலாளர் இரா பெரியார் செல்வம் தலை மையில் மாவட்ட பகுத்தறிவா ளர்கழக அமைப்பாளர் கிருஷ் ணமூர்த்தி முன்னிலை யில் நடைபெற்றது. மருத்துவர் மா அன்புமணி மருத்துவமும் பகுத்தறிவும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் விடுதலை சந்தா சேர்க்கை அவ சியம் குறித்து விளக்கினார் .வடலூர் தலைவர் புலவர் ராவணன், மாவட்ட இளை ஞரணி தலைவர் உதயசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, உளுந்தூர் பேட்டை ஒன்றிய தலைவர் செல்வ சக்திவேல், பொட்ட வெளி தலைவர் சீதாராமன், வடலூர் பெரியார் புத்தக நிலைய நிர்வாகி ராஜேந்திரன் ,ஞான பெரியார் செல்வம், ஞான அறிவு மணி, வடலூர் செயலாளர் குண சேகரன், பதிப்பாளர் பிரபாகரன், வடக்குத்து அசோக் ஆகியோர் பங்கேற்றனர். இது ஒரு மாதாந் திர நிகழ்வு மாதந்தோறும் ஒரு நிகழ்வாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment