பிரதமர் மோடி வாக்குறுதி - கேள்விக்குறியா? டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

பிரதமர் மோடி வாக்குறுதி - கேள்விக்குறியா? டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்

புதுடில்லி, ஆக. 24- வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள் பட 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி விவசாயிகள் டில்லியில் 22.8.2022 அன்று மீண்டும் போராட் டம் நடத்தினர். 

கடந்த 2020 செப்டம் பர் மாதம் நாடாளுமன் றத்தில் 3 புதிய வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சங்கத்தினர், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட் டத்தின்போது ஏராள மான விவசாயிகள் உயி ரிழந்தனர். ஒன்றிய அர சின் சமரச பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. இதையடுத்து, 2021ஆ-ம் ஆண்டு இறுதியில் இந்த சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது.

அதன் பிறகும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப் போது ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தை யின் போது, போராட்டத் தில் ஈடுபட்ட விவசாயி கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை உறுதிசெய்ய சட் டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். இதை அரசு ஏற்றுக் கொண்ட தையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு சொந்த ஊர் திரும்பினர்.

வேளாண் சட்டங்க ளுக்கு எதிராக உ.பி.யின் லக்கிம்பூர் கெரியில் கடந்த ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒன் றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் கார் மோதியது. அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் நீதி வழங்கக் கோரி சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) சார்பில் கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 72 மணி நேர போராட்டம் நடைபெற் றது.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22-ஆம் தேதி டில்லி ஜந்தர்மந்தரில் ஒரு நாள் போராட்டம் நடைபெறும் என பார திய கிசான் யூனியன் (பி கேயு), சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்-அரசியல்சாரா) உள்ளிட்ட விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன. இதற்கு காவல்துறையினர் அனு மதி மறுத்தனர். ஆனா லும், 22.8.2022 அன்று காலை பல்லாயிரக்கணக் கான விவசாயிகள் வாக னங்களில் டில்லியை நோக்கி வந்தனர். வாக னங்களை காவல்துறையினர் சோதனை செய்த னர். இதனால் டில்லி எல் லைப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

லக்கிம்பூர் கெரி சம் பவத்துக்கு காரணமான ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும். ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிப்படி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும். விவசாயிகளை கடனிலிருந்து விடுவிக்க வேண்டும். மின்சார திருத்த மசோதா 2022-அய் ரத்து செய்ய வேண்டும் என்பன உட் பட 9 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி விவ சாயிகள் போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment