புதுடில்லி, ஆக. 20- 8 யூடியூப் சேனல்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், 2021 தகவல் தொடர்பு சட்டத்தைப் பயன்படுத்தி, 8 யூடியூப் செய்தி சேனல்கள், 1 முக நூல் கணக்கு, 2 முகநூல் பதிவுகளை தடை செய் வதற்கான உத்தரவுகளை செவ்வாய்க்கிழமை (ஆக.16) அன்று பிறப் பித்தது. தடை செய்யப் பட்ட யூடியூப் சேனல்கள் மொத்தமாக, 114 கோடிக் கும் அதிகமான பார்வை யாளர்களையும், 85 லட் சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன.
இந்த யூடியூப் சேனல் கள், ஜம்மு காஷ்மீர் குறித்த பல்வேறு பொய் யான தகவல்களையும் பதிவேற்றியிருந்தன. தேசிய பாதுகாப்பு, வெளி நாட்டு நட்புறவு தொடர் பான இந்த தகவல்கள் முற்றிலும் தவறான கண் ணோட்டம் கொண்ட தாக உள்ளன. தகவல் தொடர்பு அமைச்சகத் தால் தடை செய்யப்பட் டுள்ள இந்த சேனல்கள், இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாது காப்பு, வெளிநாடுகளுட னான நட்புறவு, நாட்டின் பொதுஅமைதி ஆகியவற் றுக்கு குந்தகம் விளை விக்கும் என்று கண்டறி யப்பட்டுள்ளன.தடை விதிக்கப்பட்ட இந்த யூடி யூப் சேனல்கள், போலி யான மற்றும் பரபரப் பான சிறுபடங்கள் மற் றும் செய்தி வாசிப்பாளர் களின் படங்கள், சில செய்தி தொலைக்காட்சிக ளின் லோகோக்களை பயன்படுத்தி, பார்வையா ளர்களை தவறாக வழி நடத்தியதும் கண்டுபிடிக் கப்பட்டது. இவைகள் அனைத்திலும் மத நல் லிணக்கம், வெளிநாடுகளு டனான நட்புறவு மற்றும் பொதுஅமைதிக்கு பாதகம் ஏற்படுத்தும் உள்ளடக்கம் கொண்ட காணொலிக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நடவடிக்கைகள் காரணமாக, 2021 டிசம் பர் முதல், 102 யூடியூப் செய்தி சேனல்கள், சமூக ஊடக கணக்குகளை தடை செய்வதற்கான நெறிமுறைகளை அமைச் சகம் வெளியிட்டது. உண்மையான, நம்பகத் தன்மை வாய்ந்த மற்றும் பாதுகாப்பான இணைய வழி சுற்றுச்சூழலை உறுதி செய்வதிலும், இந்திய இறையாண்மை, ஒரு மைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு நட்புறவு, பொதுஒழுங்கை சீர் குலைக்கும் எந்தவொரு முயற்சியை முறியடிப்ப திலும் இந்திய அரசு உறு தியாக உள்ளது. இவ் வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment