புதுடில்லி. ஆக.24 இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில், புதிதாக மேலும், 8,586 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட உள்ளது. 84 பேர் பலியாகி உள்ளனர்
ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணி யுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி நேற்று (23.8.2022) ஒரே நாளில் புதிதாக மேலும், 8,586 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,57,546ஆக உயர்ந்தது.
தற்போது நாடு முழுவதும் 96,506 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.22% ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், , நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண் ணிக்கை 5,27,416ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.
நேற்று ஒரே நாளல் 9680 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,37,33,624 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.59% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 29,25,342 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,10,31,65,703 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment