கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு பற்றி அமர்நாத் ராமகிருஷ்ணன் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு பற்றி அமர்நாத் ராமகிருஷ்ணன் கருத்து

திருப்புவனம், ஆக. 9- கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வுக்கு சரியான இடத்தை தேர்வு செய்து நடத்தவில்லை என தென்னிந்திய ஆல யத் திட்ட ஒன்றிய தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் அமர் நாத் ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழ டியில் கருத்தரங்கு ஒன் றில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

கீழடி பகுதியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. ஆனால், தற்போது நடக் கும் அகழாய்வு சரியான இடத்தில் நடக்கவில்லை. நாங்கள் ஆய்வு செய்த பகுதியிலேயே தொடர்ந்து அகழாய்வு நடந்திருந் தால் பலதொல் பொருட் கள் கிடைத்திருக்கலாம்.

அகழாய்வில் அனுப வம் உள்ளவர்களையே பணியமர்த்த வேண்டும். அப்போதுதான் சரியான முடிவு கிடைக்கும். எங்க ளுடைய முன் அனுபவத் தால்தான் சரியான இடத் தைத் தேர்வு செய்ய முடிந் தது. நாங்கள் ஓராண்டாக வைகைநதியில் பயணம் செய்து கீழடியைத் தேர்வு செய்தோம்.

கீழடி நமக்குக் கிடைத்த பெரிய அளவிலான தொல்லியல் பகுதி. அந்த இடத்தை முழுமையாக அகழாய்வு செய்ய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். மேலும் எந்தெந்த இடங்களில் அகழாய்வு செய்ய வேண் டும் என்பதை முறையாக ஆய்வு செய்தபிறகே பணி யைத் தொடங்க வேண் டும். அப்போதுதான் எதிர்பார்த்த ஆதாரங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

வரும் செப்டம்பரில் அகழாய்வுப்பணி முடிவ டைய உள்ள நிலையில், இதுவரை மணலூரில் அகழாய்வுப் பணி தொடங்கப்படவில்லை. இந்தநிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணனின் கருத்து தொல்லியல் ஆர்வலர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment