மகளிர் பாதுகாப்பிற்கான நிர்பயா திட்டத்தின்கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை சரிசெய்ய ரூ.7 கோடி ஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

மகளிர் பாதுகாப்பிற்கான நிர்பயா திட்டத்தின்கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை சரிசெய்ய ரூ.7 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஆக.30 நிர்பயா திட்டத்தின் கீழ் சாலையோரம் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை சரிசெய்ய ரூ.7 கோடியே 35 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். 

டில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமையால்  கொல்லப்பட்ட நிகழ்வு உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அந்த நிகழ்வுக்குப் பிறகு பெண்களின் பாதுகாப்புக்காக சில திட்டங்களை  இந்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, பெண் களின் பாதுகாப்பை உறுதி  செய்யும் வகையில் `நிர்பயா நிதி’ என்ற ஒன்றை அப்போதைய பிரதமர் மன்மோகன்  சிங் கொண்டு வந்தார். `இந்த நிதியை பெண்களின் நல னுக்காக மட்டுமே பயன்படுத்த  வேண்டும்’ எனவும் தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில், சென்னை மாநக ராட்சி சார்பில்   பெண்களின் பாது காப்பை உறுதி செய்ய ‘நிர்பயா’ திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக   ரூ.95 கோடியில்,   பெண்களின் பாது காப்பை  உறுதி செய்ய நவீன கண் காணிப்பு கேமராக்களைக் கொண்ட ஸ்மார்ட் கம்பங்கள்  நிறுவப்பட்டுள்ளன.

குறிப்பாக, சென்னையில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா அமைத்தல் இலவச நாப்கின், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான கழிவறை போன் றவற்றை செய்து வருகிறது.

இந்நிலையில் இரவு நேரங்களில் பெண்கள் சாலைகளில் பாதுகாப் புடன்  செல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக எந் தெந்த தெருக்களில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளோதோ, துரு பிடித்துள்ளதோ அந்த மின் விளக்குகளை அகற்றி புதிதாக அமைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதற்காக, ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை  மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: மாநகராட்சி சார்பில் ‘நிர்பயா’ நிதியில் ‘பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக காவல் துறை மூலமாக  ரோந்து வாகனம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில்  இருக்கைகள் கொண்ட மகளிருக்கான நவீன இ-கழிப்பறைகளைக் கட்டவும், , தெருவிளக்குகள் பழுதானால் தன்னிச்சையாகக் கண்டறிந்து தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பெண்களின் பாதுகாப்புக்காக ஸ்மார்ட் கம்பங்களை நிறுவ மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.95 கோடியே 65 லட்சத்தில் மாநகரம் முழுவதும் 1,605 ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டு வரு கின்றன. அதிகபட்சமாக அண்ணா நகர், தேனாம்பேட்டை, அடை யாறு ஆகிய மண்டலங்களில் தலா 200க்கும் மேற்பட்ட கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் நவீன கேமராக்கள், அபாய நிலையில் ஒரு பெண் இருந்தால், அதை காவல்துறைக்கு தெரிவிக்கும் பொத்தான், பிரகாசமாக எரியும் எல்இடி மின் விளக்குகள் ஆகியவை இடம்பெறும்.

பெண் ஒருவர் தான் ஆபத்தில் இருப்பதை இந்த கம்பத்தில் உள்ள பொத்தானை அழுத்தி தெரிவித்தால், உடனே அந்த கம்பத்தில் உள்ள கேமரா 180 டிகிரி கோணத் தில் சுழன்று, சுழன்று படம் எடுக்கும். மாநகராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் தெரிவிக்கும். அது காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும், காவல் ரோந்து வாகனங்களுக்கும் தகவல் தெரிவிக்கும். குறுகிய நேரத் தில் தொடர்புடைய  இடத்துக்கு காவல்துறையினர் வந்துவிட முடி யும். கேமரா எடுத்த படங்களின்  உதவியுடனும், குற்றவாளிகளை அடையாளம் காணமுடியும். இதன் மூலம் பெண்கள்  மற்றும் குழந் தைகளின் பாதுகாப்பு உறுதி செய் யப்படும். அதற்கான திட்டமிட்ட லும் தற்போது நடைப்பெற்று வருகிறது. இரவு நேரத்தில் தனியாக வேலைக்கு சென்று  வர வசதி யாகவும், பயமில்லாமல் சாலையில் நடந்து செல்லவும் வசதி  ஏற்படுத் தப்பட்டுள்ளது. 

இது தவிர பல பகுதிகளில் பழுதடைந்துள்ள மின்  கம் பங்களோ, துருப்பிடித்த மின் கம்பங்களோ இருந்தால் அதனை அகற்றி புதிதாக  கம்பங்களை அமைக்கவும் மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. தோராய மாக  2000 மின்கம்பங்களுக்காக ரூ.7 கோடியே 35 லட்சம் சென்னை மாநகராட்சி  மன்ற கூட்டத்தில்  ஒதுக்கப்படவுள்ளது. இவ்வாறு கூறினார்.


No comments:

Post a Comment