புதுடில்லி, ஆக.30 இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,591 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ள நிலையில், 45பேர் உயிரிழந்துள்ள னர். நாடு முழுவதும் தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று (30.8.2022) காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டின் கரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24மணி நேரத்தில், புதிதாக மேலும் 7,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,15,723 ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 4.58% ஆக உள்ளது.
தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 84,931பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.19% ஆக உள்ளது.
நேற்று (29.8.2022) மட்டும் மேலும் 45 பேர் இறந்துள் ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,799 ஆக உயர்ந்தது.
கடந்த 24மணி நேரத்தில் 9,206 பேர் குணமடைந்து உள்ளனர். இதன்மூலம் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,02,993 ஆக உயர்ந்துள்ளது. குண மடைந்தோர் விகிதம் 98.62% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று (29.8.2022) ஒரே நாளில் 24,70,330 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,11,91,05,738 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 512 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 512 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத் தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 67 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் இருந்து நேற்று (29.8.2022) குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 575 ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரோனா பாதிப்பைக் கண்டறிய 20 ஆயிரத்து 306- பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 77 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment