சென்னை, ஆக.27 தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான குறைந்த பட்ச மானியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட 3 அமைப்புகளுக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான மானியம் என ரூ.752 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் 5-ஆவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, மாநில அரசு தனது சொந்த வரி வருவாயில் 10 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புக ளுக்கு பகிர்ந்தளிக்க முடிவெடுத்துள்ளது.
அத்தொகையில் ஊரக உள்ளாட் சிகளுக்கு 56 சதவீதம், நகர்ப்புற உள் ளாட்சிகளுக்கு 44 சதவீதம் வழங் கப்படுகிறது.
ஊரக உள்ளாட்சிகளுக்கு வழங்கப் படும் பகிர்வு நிதியானது, மூலதன நிதியாக 20 சதவீதமும், தொகுப்பு நிதியாக 10 சதவீதமும், பகிர்வு மானிய மாக 70 சதவீதமும் வழங்கப்படு கிறது. இந்நிலையில், மாநில நிதி ஆணை யத்தின் பரிந்துரைப்படி, ஊராட்சி களுக்கான பகிர்வு நிதிக்கு நிதிநிலை அறிக்கையில் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.408 கோடியே 46 லட்சத்து 99 ஆயிரம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.1,879 கோடியே 92 லட்சத்து 36 ஆயிரம், கிராம ஊராட்சிகளுக்கு ரூ.2,794 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரம் என மொத்தம் ரூ.5,080 கோடியே 87 லட்சத்து 45 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதில் ஏற்கெனவே, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 12,525 கிராம ஊராட்சி களுக்கும், 388 ஊராட்சி ஒன்றியங் களுக்கும் ஜூலை, ஆகஸ்ட் மாதங் களுக்கான குறைந்தபட்ச மானியம் மற்றும் மக்கள் தொகை மானியமாக ரூ. 693 கோடியே 93 லட்சத்து 6 ஆயிரத்து 571-ம், மாவட்ட பஞ்சாயத்துக்கு மக்கள் தொகை மானியமாக ரூ.58 கோடியே 6 லட்சத்து 71 ஆயிரத்து 286-ம்என ரூ.751 கோடியே 99 லட்சத்து 77 ஆயிரத்து 857 அய் ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இதை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி ஆணையர் கோரிய நிதியை ஒதுக்கி உத்தரவிட்டுஉள்ளது. இவ்வாறு ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment