சென்னை, ஆக. 4- போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப் பந்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனினும், தொழிற்சங்கத்தினரின் பெரும் பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட் டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழக ஊழியர்களுக்கான, 14ஆவது ஊதிய ஒப்பந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையானது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயற்சி மய்ய வளாகத்தில் நேற்று (3.8.2022) நடந்தது.
அங்கு, 60-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்க நிர்வாகிகள் மற் றும் போக்குவரத்துக் கழக உயரதி காரிகளுடன் சுமார் 6 மணி நேரத் துக்கு மேலாக அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பே மேட் ரிக்ஸ் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என ஒப்புக் கொள் ளப்பட்டது. அதனை எந்த கால கட்டத்தில் இருந்து தருவது, எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெறுவது உள்ளிட்டவை குறித்து பேசப் பட்டன.தொழிற்சங்கத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இதற்கு நிதித்துறையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதனால் ஊதிய ஒப்பந்தம் எட் டப்படவில்லை.
எனினும், அவர்களது பெரும் பாலான கோரிக்கைகள் ஏற்கப் பட்டுள்ளது. அதற்கு தொழிற்சங் கத்தினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும். அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட ஊதிய முரண் பாடு களையப்படும்.போக்குவரத் துத் துறைக்கு அரசு பல்வேறு வழிகளில் உதவுகிறது. டீசல் விலை உயர்ந்த போதிலும் பயணச்சீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை. இலவச திட்டங்களுக்கு அரசு நிதி வழங்குவதால் போக்குவரத்துத் துறைக்கு இழப்பு இல்லை. இவ் வாறு அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் தொமுச பேரவை பொதுச் செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான மு.சண் முகம் கூறியதாவது: 2019ஆம் ஆண்டு, செப்.1ஆம் தேதி முதல் 5 சதவீத ஊதிய உயர்வு, போராட் டத்தில் பங்கேற்றவர்களுக்கு தண் டனை ரத்து, படித்தொகை வழங் குதல், பொதுவான நிலையா ணைக்கு குழு, பழைய ஓய்வூதிய திட்ட பிரச்சினைக்கு தீர்வு உள் ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற் றப்படும் என அமைச்சர் உறுதிய ளித்துள்ளார்.3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் என்னும் நடைமுறை தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஓய்வூதியர்களுக்கு நிலுவை பஞ்சப்படி வழங்க வலியுறுத்தினோம். 99 சதவீதம் ஊதிய பேச்சுவார்த் தையில் முன்னேற்றம் இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
ஒப்பந்தத்தை இறுதி செய்ய கோரிக்கை
வேலைநிறுத்தம் குறித்து சிஅய்டியு தொழிற்சங்கத்தினரிடம் கேட்டபோது, “பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் ஆக.3ஆம் தேதிக்குப் பிறகு திட்ட மிட்ட வேலைநிறுத்தம் தள்ளி வைக்கப்படுகிறது.விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் இறுதி செய்யப் படாவிட்டால் வேலைநிறுத்தம் நடைபெறும்” என்றனர்.
No comments:
Post a Comment