வேலூர், ஆக.23 தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்க ஒன்றிய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்று நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது குறித்து இந்த வாரம் ஒன்றிய நல்வாழ்வு துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும், காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் எம்ஆர்பி மூலம் வரும் அக்டோபர் இறுதிக்குள் நிரப்பப் படும் எனவும் தமிழ்நாடு நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21.8.2022இல் கூறியதாவது, ''கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேலூர் மாவட்டம் தன்னிறைவு பெற்ற மாவட் டமாக உள்ளது. மாநிலம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை 96.99%, 2ஆ-வது தவணை 89.5% செலுத்தப்பட்டுள்ளது. 3.50 கோடி நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.
இந்த வாரம் நானும், துறை செயலாளரும் டில்லி சென்று ஒன்றிய நல்வாழ்வுத் துறை அமைச் சரை சந்திக்க உள்ளோம். அப்போது மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து பேச உள்ளோம். அதேபோல, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தென்காசி, பெரம் பலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட் டத்துக்கு புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கவும், கூடுதல் தடுப்பூசி தமிழ் நாட்டுக்கு கேட்க உள்ளோம்.
தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் எம்ஆர்பி மூலம் நிரப்படும். வேலூர் பழைய அரசு மருத்துவமனை (பென் லேன்ட்) தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கேட்டுக்கொண்டதற்கிணங்க காட்பாடியில் பல்நோக்கு மருத்துவ மனை கட்ட 30 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு பணிகள் முடிந்த பிறகு அடுத்தக்கட்ட பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேரளாவையொட்டி 13 இடங்களில் தொடர் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் ஒன்றிய அமைச்சரோடு தமிழ்நாடு அமைச்சருமான நானும் கலந்து கொள் கிறேன். அதில் உலத்துக்கே முன் மாதிரியாக உள்ள வீடு தேடி மருத்துவ திட்டம் குறித்து ஆவணப்படுத்த உள்ளோம்.
இல்லம் தேடி மருத்துவம் திட்டத் தில் 85 லட்சத்து 36 ஆயிரத்து 501 பேர் இதுவரை பயன் பெற்றுள்ளனர். இந்த திட்டம் உலத்துக்கே முன்மாதிரியான உள்ளது. துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்த பாலிகிளினிக் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. சத்துவாச்சாரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஒவ்வொரு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளன. இது தொடர்பான தகவல் அறிவிப்பு பல கையில் இடம் பெறும். அதை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம் என்றார் அவர்.
இதைதொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், ஜோலார் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங் களில் நடைபெற்ற மெகா தடுப்பூசியை முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment