சென்னை, ஆக.20 தமிழ்நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:- தமிழ்நாட்டில் புதிதாக 639 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை யில் 98 பேர், கோவையில் 87 பேர், செங்கல்பட்டில் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 402 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 2-ஆவது வாரமாக உயிரிழப்பு இல்லை. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளாகி 6 ஆயிரத்து 229 பேர் சிகிச்சை யில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயி ரத்து 479 பேரும், கோவையில் 633 பேரும், செங்கல்பட்டில் 371 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, August 20, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment