புதுச்சேரியில் 60,000 விடுதலை சந்தா சேர்ப்பு குறித்து ஆறு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

புதுச்சேரியில் 60,000 விடுதலை சந்தா சேர்ப்பு குறித்து ஆறு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

புதுச்சேரி, ஆக. 23- திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானத்தின் படி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 60 ஆண்டுகள் - உல கின் ஒரே பகுத்தறிவு நாளேட் டுக்கு ஆசிரியராக தொடர்ந்து இருப்பதன் சிறப்பை உணர்ந்து 60,000 விடுதலை சந்தா சேர்க் கும் திட்டப்படி புதுச்சேரியில் 16.8.2022 செவ்வாய் காலை 10 மணி அளவில் புட் பாரடைஸ் உணவகத்தில் கலந்துரையா டல் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி, கடலூர், சிதம்ப ரம், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம் மாவட்டங்களின் கழக தலைவர்கள், பொறுப்பா ளர்கள் பங்கேற்ற நிகழ்வுக்கு திராவிடர் கழக தலைவர் விடு தலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங் கினார். செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழக பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலை வர் சிவ.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக பொதுச் செயலாளர் கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், முனைவர் துரை.சந்திரசேகரன், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோரின் விடுதலை சந்தா சேர்ப்பு குறித் தும் அவசியமாக  கருதி சீக்கிர மாக பணியை முடித்து தமிழர் தலைவரிடம் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தர வேண்டுமென உரையாற்றி யதை அடுத்து இறுதியாக தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் பல்வேறு நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டியும், கழக பொறுப்பாளர்கள் எந்தெந்த நேரத்தில் எவ்வாறெல்லாம் செயல்பட்டு விடுதலை சந் தாவை சேர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி அன்பான வேண்டுகோள் உரை நிகழ்த் தினார்.

கழக மாவட்ட பொறுப்பா ளர்கள் தங்களின் மாவட்டத் தில் சேர்த்த விடுதலை சந்தாக் களை தலைவரிடம் அளித்து மகிழ்ந்தனர். உணவகத்தில் அனைவருக்கும் உணவு ஏற்பாட் டினை புதுச்சேரி மாவட்ட கழக தலைவர் சிறப்பாக செய் திருந்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் பின்வரும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. தமிழர் தலைவர் ஆசிரி யரின் 60 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணியை பாராட்டி, கழக தலைவன் கட்டளைப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட விடுதலை சந்தா எண்ணிக்கையை முடித்து தருவது எனவும்,

2. சென்னையில் நடைபெற உள்ள விடுதலை சந்தா வழங் கும் விழாவில் குடும்பம் குடும் பமாக கழக தோழர்கள் சென்று கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது,

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்:  மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், சிதம்பரம் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாநில கழக இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், சிதம்பரம் மாவட்ட துணைத் தலைவர் கோ.வி.பெரியார்தாசன், சிதம் பரம் மாவட்ட ப.க. பொறுப்பா ளர் கோ.நெடுமாறன், கடலூர் மாவட்ட தலைவர் தென்.சிவக் குமார், கடலூர் மண்டல கழக தலைவர் சொ.தண்டபாணி, கடலூர் மண்டல செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், புதுச் சேரி மண்டல கழக செயலாளர் கி.அறிவழகன், மகளிர் அணி தலைவர் அ.எழிலரசி, கழக பொதுக்குழு உறுப்பினர் கோ. புத்தன், வடலூர் நகர கழக தலைவர் புலவர் சு.இராவணன், அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன், புதுச்சேரி கழக பொதுக்குழு உறுப்பினர்கள் லோ.பழனி, விலாசினி இராசு, கடலூர் மாவட்ட ப.க. தலைவர் இரா. கந்தசாமி (எ) தமிழன்பன், செயலாளர் க.எழிலேந்தி, க.சுகுணா எழிலேந்தி, ஆர்.கலைவாணி, திண்டிவனம் மாவட்ட கழக தலைவர் இர. அன்பழகன், மா.அரிமாவள வன், திண்டிவனம் நகரத் தலை வர் பச்சையப்பன், புதுச்சேரி ப.க. மேனாள் செயலாளர் கோ.மு.தமிழ்ச்செல்வன், திரா விடர் கட்டுமான சங்கத்தின் தலைவர் புதுவை கோ.குமார், இரா.சாம்பசிவம், வே.அன்பர சன், திண்டிவனம் கழக மாவட்ட அமைப்பாளர் வில் லாளன், கோதை, பாகூர் பொன்.தாமோதரன், புதுச்சேரி கழக இளைஞரணி தலைவர் திராவிட இராசா, தி.சந்திரசேகரன், ச.பிரபஞ்சன், கங்கை அமரன், வேப்பூர் பி. பழனிசாமி, விருத்தாசலம் ஜி.ஷஷா, புதுச்சேரி கழக மகளிரணி தேவகி பழனி, வரலட்சுமி பழனி, ப.ராகப்பிரியா, மாணவர் அணி ப.தமிழ் பிரியன், செ.இராமராஜ், டி. செல்வகாந்தி, வை.முத்துராஜ்,நிலவன், திருச்சி அர்ச்சுனன், உட்கோட்டை ஏ.கே.அருள் மணி, தென்காசி சு.இனியன், புதுச்சேரி மணவாளன், நெய் வேலி பாவேந்தர் விரும்பி, கட லூர் மாவட்ட கழக அமைப் பாளர் சி.மணிவேல், களத்தூர் பழனிராஜ், சேர்ந்தநாடு ஆர்.பரணிதரன், விழுப்புரம் நகர கழக செயலாளர் ச.பழனிவேல், விழுப்புரம் மண்டல கழக செயலாளர் தா.இளம்பரிதி, மாநில இளைஞரணிதுணை செயலர் தா.தம்பி பிரபாகரன், ஒன்றிய செயலாளர் க.செல்வ குமார், விழுப்புரம் மாவட்ட கழக தலைவர் ப.சுப்பராயன், நகர கழக தலைவர் கொ..பூங்கான், சேர்ந்தநாடு தி.மு.க. செயலாளர் ப.முருகதாஸ், திண்டினம் ரமேஷ், புதுச்சேரி துரை சிவாஜி, ஆ.சிவராசன், மயிலம் ஒன்றிய கழக செயலா ளர் தழுதாளி ச.அன்புக்கரசன், புதுச்சேரி மு.ஆறுமுகம், களஞ்சியம் வெங்கடேசன், பெ.ஆதி நாராயணன், திண்டிவனம் செ.பரந்தாமன், புதுச்சேரி ப.க. தலைவர் கைலாச நெ.நடரா சன், விருதாசலம் கபிலன், பொழிலன், கழக பேச்சாளர் யாழ் திலீபன், சிதம்பரம் அன்பு சித்தார்த்தன், விருத்தாசலம் மாவட்ட கழக தலைவர் அ.இளங்கோவன், மண்டல அமைப்பாளர் வை.இளவர சன், பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் துரை.செய பால், சிதம்பரம் மாவட்ட மேனாள் அமைப்பாளர் கு.தென்னவன், புதுச்சேரி மு.குப்புசாமி, விருத்தாசலம் வெற் றிச்செல்வன் மகேஷ், திட்டக் குடி நாத்திக நம்பி, புதுச்சேரி கழக இளைஞரணி செயலாளர் கோ.அல்போன்ஸ், செ.கா.பாஷா, அருணா லேப் மகேஷ், மற்றும் பலர் கலந்து கொண்ட னர். ஆசிரியரின் வருகையை யொட்டி கழக கொடிகள் இரு புறமும் கட்டப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment