5ஜி அலைக்கற்றை ஏலம்-முறைகேட்டை அம்பலப்படுத்துகிறார் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

5ஜி அலைக்கற்றை ஏலம்-முறைகேட்டை அம்பலப்படுத்துகிறார் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா

புதுடில்லி, ஆக. 4- நடைபெற்று முடிந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர். ஆ.ராசா புகார் கூறி உள்ளார்.

இந்தியாவின் அதிவேக 5ஜி அலைக்கற்றை ஏலம் விடும் பணி கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங் கியது. ஒருவாரமாக நடைபெற்று வந்த நிலையில், முடிவுக்கு வந்தது. இதில்,  முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதிக அளவி லான அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளது. இந்த ஏலத்தில், ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், வோடபோன்-அய்டியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் பங்குபெற்றன. முதல் நாள் ஏலத்தி லேயே, இதுவரை இல்லாத அள வுக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டன.

1லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு  5ஜி அலைக்கற்றை உரிமம் விற்கப்பட்டதாக தகவல் கள் வெளியான நிலையில், மொத் தம் 72 ஆயிரத்து 98 மெகா கெர்ட்ஸ் அலைக்கற்றைக்கான ஏலத்தில், 7சதவீதம் அதாவது 51 ஆயிரத்து 236மெகா கெர்ட்ஸ் விற் கப்பட்டதாக ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். மேலும், 5ஜி அலைவரி சையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி ஆகஸ்டு 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், அக் டோபர் மாதத்தில் 5ஜி சேவைகள் தொடங்கும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இந்த ஏலத்தில், அதிக தொகை கொடுத்து 5ஜி உரிமத்தை ஜியோ நிறுவனம் கைப்பற்றியது.  700 மெகா கெர்ட்ஸ், 3 ஆயிரத்து 300 மெகாஹெர்ட்ஸ், 26 கிகா ஹெர்ட்ஸ் உள்ளிட்ட அலை வரிசைகளை கைப்பற்றியிருக்கும் ஜியோ, இதற்காக 88 ஆயிரத்து 78 கோடி ரூபாயை செலவு செய்ய வுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவன மும் 43 ஆயிரத்து 84 கோடி ரூபாய்க்கு, 900 முதல் 3 ஆயிரத்து 300 மெகா கெர்ட்ஸ் அலைவரிசை களை ஏலம் எடுத்துள்ளது. அதானி குழுமம் 400 மெகா கெர்ட்ஸ் அலைவரிசையை கைய கப்படுத்த, 212 கோடி ரூபாயை செலவு செய்யவுள்ளது.

இந்த நிலையில்,  5ஜி அலைக் கற்றை ஏலத்தில் முறைகேடு நடந் துள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர். ஆ.ராசா குற்றம் சாட் டியுள்ளார். ரூ.5 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டிய 5ஜி ஏலம் ரூ.1.50 லட்சம் கோடிக்குத்தான் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கே சென்றது என்று ஒன்றிய அரசு தான் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வெறும் 30மெகா ஹெர்ட்ஸ் 2ஜி அலைக்கற்றையை டிராயின் பரிந்துரைப்படி கொடுத்தபோது, ரூ.1.76கோடி இழப்பு  என அன் றைக்கு இருந்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய்  அறிக்கை கொடுத்தார். அது ஆட் சியை கவிழ்க்க நடந்த சதி. இன் றைக்கு இவர்கள் ஏலம் விட்டி ருப்பது, 51ஜிகா கெர்ட்ஸ். அதா வது மெகா கெர்ட்ஸைவிட, ஜிகா ஹெர்ட்ஷின் திறனும் அளவும் 20 மடங்கு அதிகம். அதன்படி பார்த் தால், 5ஜி ஏலம் 5 அல்லது 6 லட்சம் கோடிக்கு போயிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செல்லவில்லை. இது திட்டமிடுதல் தவறா அல்லது நான்கைந்து கம்பெனிகளுடன் இணைந்து ஒன்றியஅரசு மோசடி செய்ததா என்பதை விசாரணை நடத்த வேண்டும். இது மிகப்பெரும் மோசடி என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment