சென்னை, ஆக.30 தமிழ்நாட்டில் டெங்கு, பன்றி காய்ச்சல் தாக்கம் அதிகம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், இந்தியாவிலேயே முதன் முறையாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்து துறையின் கீழ் செயல்படும் 5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்கள் தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின், அங்கீகாரம் பெற்றதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
ராமநாதபுரம் வெங்கட்டாகுறிச்சி, தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி, கன்னியாகுமரி தோவாளை உள்பட 5 மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் சான்று கிடைத்துள்ளது. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள மருத்துவ அங்கீகாரத்திற்கான மிகப்பெரிய சிறப்பு. தமிழ்நாட்டில் தற்போது வரை பன்றிக்காய்ச்சல் இல்லை. டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக ஊரக வளர்ச்சி துறை, நகர்ப்புற வளர்ச்சி துறை, மக்கள் நல்வாழ்வு துறை என மூன்று துறையும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாவட்ட வாரியாக பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்தப் பகுதியிலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment