சென்னை, ஆக. 3 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விண் ணப்பித்தவர்களுக்கு வருகின்ற 5ஆம் தேதி நேரடி கலந்தாய்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி போன்ற படிப்புகளில் சேர 1.25 லட்சம் இடங் களுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு, ஜூன் மாதம் 22ம் தேதி தொடங்கியது. கடந்த 27ஆம் தேதி வரை 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 மாணவ-மாணவிகள் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 பேர் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்ததோடு, அதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 பேர் கட்டணங்களை செலுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் விண்ணப்பப்பதிவு செய்திருந்தவர்களில் கட்டணங்களை செலுத்தி, முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்திருந்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த தரவரிசை பட்டியலை கல்லூரிகள் சரிபார்த்த பிறகு, அந்தந்த பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாண வர்களின் மதிப்பெண்ணை கணக்கில் கொண்டு இறுதி பட்டியலை தயார் செய்து அவர்களுடைய இணையதளத்தில் இன்று வெளியிட இருக்கின்றனர். இந்த தர வரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். கலந்தாய்வை பொறுத்த வரையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வாயிலாக நடந்து வந்தது.
இந்த ஆண்டு நேரடியாக நடக்கிறது. வருகிற 5ஆம் தேதி(நாளை மறுதினம்) முதல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித் துறை உத்தரவிட்டு இருக்கிறது. அதன் அடிப் படையில் விண்ணப்பித்தவர்களில் தகுதி யானவர்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்கும் போது பதிவு செய்திருந்த செல்பேசி எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக எந்த தேதியில் கலந் தாய்வில் பங்குபெற வேண்டும். மேலும், கல்லூரிகளில் சேரும் மாணவர்களை கணினி எழுத்தறிவு திட்டம், மென் திறன் பயிற்சித் திட்டம் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் படிப்புகளில் (நான் முதல்வன் திட்டம்) சேர ஊக்குவிக்கலாம் என்றும் கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment