மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்கள், 50:50 என்ற வீதத்தில் தமிழ்நாடு அரசு, வேலூர் சி.எம்.சி. பிரித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்கள், 50:50 என்ற வீதத்தில் தமிழ்நாடு அரசு, வேலூர் சி.எம்.சி. பிரித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

சென்னை, ஆக.24 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு போக எஞ்சிய இடங் களை தமிழ்நாடு அரசும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி.) நிர்வாகமும் 50:50 என்ற வீதத்தில் சரிபாதி யாக பிரித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் வேலூர் சி.எம்.சி.யில் உள்ள மொத்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப் படும் 50 சதவீத இடங்கள் போக எஞ்சிய 50 சதவீத இடங்களை கிறித்துவ மதத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே கல்லூரி நிர்வாகம் வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அகில இந்திய ஒதுக்கீடு போக எஞ்சிய 50 சதவீத இடங்களை மாநில ஒதுக்கீட்டின்கீழ் தமிழ்நாடு அரசும், கல்லூரி நிர்வாகமும் சரிபாதியாக பிரித்துக்கொண்டு 'நீட்' தேர்வு மெரிட் லிஸ்ட் மற்றும் மாநில சிறுபான்மையினர் பட்டியல்படி அனைவருக் கும் பங்கிட வேண்டும், என கல் லூரி நிர்வாகத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதி பதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா அமர்வு பிறப் பித்துள்ள உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், சி.எம்.சி. கல்லூரி நிர் வாகமும் 50:50 என்ற வீதத்தில், எஞ்சிய இடங்களை சரிபாதி யாக பிரித்துக்கொண்டு, முது நிலை மற்றும் இளநிலை மாண வர் சேர்க்கையை நடத்த வேண் டும்.

இதுதொடர்பாக இரு தரப்பும் மேற்கொண்டுள்ள ஒப் பந்தம் சரியானதுதான்’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment