சென்னை, ஆக 15- சென்னை, மதுரை, கோவை கோட்டங்களுக்கு பிஎஸ்-6 ரகத்தை சேர்ந்த 442 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது.
தமிழ்நாட்டின் 8 போக்குவரத்து கழகங்களில் உள்ள காலாவதியான பேருந்துகளை ஈடுசெய்யவும், காற்று மாசுபாட்டை குறைக்கும் பிஎஸ்-6 ரக பேருந்துகளை பயன்படுத்தும் வகை யிலும் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இதில் முதல்கட்டமாக, சென்னை, மதுரை, கோவை கோட்டங்க ளுக்கு 442 பேருந்துகள் கொள்முதல் செய்யப் பட உள்ளன. இவை அனைத் தும் டீசலில் இயங்கும் தாழ்தள பேருந் துகள் ஆகும்.
ஜெர்மனியின் கேஎஃப்டபிள்யூ திட்டத்தின் கீழ் இந்த பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந் தப்புள்ளி கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பேருந்துகளை தயா ரித்து வழங்க, தேசிய அளவில் மட்டு மின்றி, பன்னாட்டு அளவில் உள்ள நிறுவனங்களும் விண்ணப்பிக்கும் வகை யில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள் ளது. இதில் பங்கேற்க அக்டோபர்12-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு, பேருந்து கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், அதிக அளவிலான நிறுவனங்கள் போட்டி யிடும் என்று எதிர்பார்க்கிறோம். இவ் வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment