தமிழர் தலைவரிடம் சந்தா
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் செயலாளர் கோ.மு.தமிழ்ச்செல்வன் 60ஆம் பிறந்தநாளை முன்னிட்டு,தனது இணையர் சி.குமாரி (Senior Nursing officer) -யுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து, வாழ்த்துப் பெற்று, 27 உண்மை சந்தாக்கள் மற்றும் 1 விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.10,450 வழங்கி மகிழ்ந்தார். உடன்: மகள் மருத்துவர் இளவேனில் மற்றும் சுரேஷ். (1.8.2022,பெரியார் திடல்).
---------------------------
படம் 1: கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் ஆனந்தன்,மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து கும்மிடிப்பூண்டி மாவட்டம் சார்பாக 11 விடுதலை சந்தாக்களும், பொன்னேரி மாவட்டம் சார்பாக 5 விடுதலை சந்தாக்களும், புழல் சார்பாக 5 விடுதலை சந்தாக்கள் மற்றும் 2 அரை ஆண்டு சந்தாக்கள் என மொத்தம் ரூ.44,000 வழங்கினர் (1.8.2022). படம் 2: பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாக தி.மு.க.வின் இலக்கிய அணி பொருளாளர் டாக்டர் நா.சந்திரபாபு , தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 5 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.10,000/- வழங்கினார். உடன் பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர், வழக்குரைஞர் வீரமர்த்தினி (2.8.2022). படம் 3: ஆவடி மாவட்டத்தின் சார்பில் 2 ஆண்டு, 1 அரையாண்டு என மொத்தம் 3 சந்தாக்களுக்கான தொகை ரூ. 4550 க்கான காசோலையை கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் வழங்கினார். (1.8.2022). படம் 4:. கல்லல் ஒன்றியசெயலாளர் கொரட்டி.வி.பாலு விடுதலை ஓராண்டு சந்தாவை கழக பொதுக்குழு உறுப்பினர் சாமிதிராவிடமணியிடம் வழங்கினார்.
--------------------------
தகடூர் தமிழ்ச்செல்வி-ஊமை ஜெயராமன் இணையரின் இளைய மகன் மரு.திராவிடன் அம்பேத்கர் ஓர் ஆண்டு விடுதலை சந்தாவை கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரின் தனிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் ஓர் ஆண்டு விடுதலை சந்தா, தகடூர் தமிழ்ச்செல்வி-ஊமை ஜெயராமன் இணையரின் சம்பந்தி மருத்துவர் கே.ஆர். பிரகாசம் ஓர் ஆண்டு விடுதலை சந்தா, ஓய்வுபெற்ற எஸ்.பி.அய். வங்கியின் முதுநிலை மேலாளர் கி.சண்முகம் - மஞ்சுளா இணையர் 2 ஆண்டு விடுதலை சந்தா. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சகோதரி ஜெயந்தி ஓர் ஆண்டு விடுதலை சந்தாக்களை. மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வியிடம் வழங்கினர்.
------------------------------------
ஈரோடு மாநகராட்சி மாமன்ற 2 ஆம் மண்டல தலைவர் எம்.பி.சுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர் ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் தமிழ்ப் பிரியன், மாமன்றம் 4 ஆம் மண்டல தலைவர் குறிஞ்சி நா.தண்டபாணி, தி.இ.த.பேரவை சேகர் ஆகியோர் விடுதலை சந்தாக்களையும், கோ.திருநாவுக்கரசு தாம் சேகரித்த 26 ஆண்டு சந்தாக்கள் 9 அரை ஆண்டு சந்தாக்களையும் மாநில அமைப்புச்செயலாளர் ஈரோடு தசண்முகத்திடம் வழங்கினார்கள்.
------------------------------------
23.7.2022 அன்று நெய்வேலி நகர்ப்பகுதிகளில் விடுதலை சந்த சேர்ப்புப் பணியில் திராவிடர் கழக மேனாள் அமைப்புச் செயலாளர் நெய்வேலி ஞானசேகரன் தலைமையில் நகர செயலாளர் இரத்தினசபாபதி, வடக்குத்து பகுதி தலைவர் பாசுகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். திராவிட நட்புக்கழக நெய்வேலி நகர செயலாளர் ஆட்டோ ராமலிங்கம் ஓராண்டு சந்தா, பணி ஓய்வு பெற்ற உணவக மேலாளர் சொ.சந்திரசேகரன் அவரது இணையர் சவகர் பள்ளி முதல்வர் சேதுமணி ஓராண்டு சந்தாவும், பொறியாளர் வீராசாமி ஓராண்டு சந்தாவும், அ.தி.மு.க. நகர செயலாளர் க.வெற்றிவேல் மற்றும் நகரத் தலைவர் க.கோவிந்தராஜ் தலா அரையாண்டு சந்தாவும் வழங்கினர்.
No comments:
Post a Comment