40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

நாகை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ந.ஆனந்தன் 50 சந்தாக்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கல்

தி.மு.கழகத்தின் நாகை வடக்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்ற ஆனந்தன் அவர்களுக்கு நாகை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.இராஜ்மோகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கி.சுரேஸ் ஆகியோரிடம் சந்தாக்களுக்கான தொகையை வழங்கினார்.

புதுச்சேரியில் கழகப் பொதுச் செயலாளர் சந்தா சேர்ப்புப் பணி

---------

தி.மு.கழகத்தின் நாகை மாவட்ட மாணவர் கழக துணை அமைப்பாளரும் மேனாள் ஒன்றியக் குழு உறுப்பினருமான மான இளம் சுந்தர் வாழ்குடி விடுதலை சந்தா தொகை ரூ.20,000அய், தி.மு.கழகத்தின் திருமருகல் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளரும் கொங்கராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் க.விவேக் விடுதலை சந்தா ரூ.20,000அய், தி.மு.கழகத்தின் நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் நரிமணம் ஊராட்சி மன்ற தலைவருமானகார்த்திக் விடுதலை சந்தா ரூ.20,000அய், திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஒன்றிய குழு உறுப்பினரும் தி.மு.கழகத்தின் தலைமை கழக பேச்சாளருமான ஆரூர் மணிவண்ணன் விடுதலை சந்தா ரூ.20,000அய், அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் இரா.மணிகண்டன் விடுதலை சந்தா ரூ.20,000அய், தி.மு.கழகத்தின் திருமருகல் வடக்கு ஒன்றிய துணை செயலாளர்   எம்பி மதி விடுதலை ஆண்டு சந்தாக்களை நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா ஆகியோரிடம் வழங்கினர். உடன் மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.இராஜ்மோகன், மண்டல மாணவர் கழக செயலாளர் மு.இளமாறன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கி.சுரேஸ்.

திருப்பூர் மாவட்டம் மன்னை முருகானந்தம் விடுதலை ஆண்டு சந்தா, திருப்பூர் மாவட்டம் பல்லடம் முகில் நிலா உணவக உரிமையாளர் அ.மணிகண்டன் விடுதலை ஆண்டு சந்தா , திருப்பூர் மாவட்டம் பல்லடம், காரணம்பேட்டை கி.பாலகிருஷ்ணன் (தொ.மு.ச) விடுதலை ஆண்டு சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், திருப்பூர் மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, திருப்பூர் மாவட்ட தி.மு.க கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பல்லடம் இளங்கோ ஆகியோரிடம் வழங்கினார். (9.8.2022). தி.மு.க கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயபிரதாப் விடுதலை ஆண்டு சந்தா கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார் (9.8.2022). பொன்னேரி நகர திராவிடர் கழகம் சார்பில்  சந்தா சேர்ப்பு நிகழ்வில் பொன்னேரி நகர தலைவர் வே.அருள் தலைமையில் பொன்னேரி அஷோக் மேத்தா மற்றும் வழக்குரைஞர் சுரேந்தரிடம் இரண்டு சந்தாக்கள் பெறப்பட்டது. உடன் பொன்னேரி நகர செயலாளர் மு. சுதாகர். திருப்பூர் மாவட்டம் பல்லடம், 

தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி  விடுதலை சந்தா, தஞ்சை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுகந்திதுரைசிங்கம் (ம.தி.மு.க)விடுதலை சந்தா, தஞ்சை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்  அரனேஷ்மேரி பால்ராஜ்  விடுதலை சந்தாக்களை  தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் ஆகியோரிடம்  வழங்கினார் (9.8.2022). தஞ்சை மாவட்ட மகளிரணி தலைவர் வள்ளியம்மை தண்டாயுதபாணி விடுதலை ஆண்டு சந்தாவை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட் ஆகியோரிடம் வழங்கினார் (9.8.2022). பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பிரதிநிதியும்,  மெரினா ஓட்டல் உரிமையாளருமான மெரினா ஆறுமுகம் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000அய் பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழக தலைவர் சிற்பி சேகர் மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரத்தினசாமி ஆகியோரிடம் வழங்கினார்.

பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சா. சின்னக்கண்ணு விடுதலை ஆண்டு சந்தா ரூபாய் 2000,  பட்டுக்கோட்டையில் விடுதலை ஆண்டு சந்தா ரூபாய் 2000அய் மேனாள் நாகை  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜி. முருகையன் மருமகன் - குமணனின் மகன் பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழக தலைவர் பொறியாளர் சிற்பி சேகரிடம் வழங்கினார். உடன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரத்தின சபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி காமராஜ் ஆகியோர் உள்ளனர். பொன்னேரி நகர திராவிடர் கழகம் சார்பில் விடுதலை 60 ஆயிரம் சந்தா சேர்ப்பு நிகழ்வில் அமைப்பு செயலாளர் வி. பன்னீர்செல்வம் தலைமையில் பொன்னேரி நகர தலைவர் வே. அருளுடன், பொன்னேரி நகர மன்ற தலைவர் மருத்துவர் பரிமளம் விஸ்வநாதனிடம் (தி.மு.க.) 15 ஓராண்டு விடுதலை சந்தாக்களை பெற்றுக் கொண்டனர். திருப்பத்தூர் விஜயா குழுமத்தின் தலைவர் திரு மதியழகன் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000அய் முதல் தடவையாக வழங்கினார் 


தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மேனாள் சிறப்பு உதவியாளர் முத்து வாவாசி விடுதலை சந்தாதொகை ரூ.1000த்தை திராவிட தொழிலாளரணி தோழர் ஆ.துரை இராவணனிடம் வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பா.குணராஜிடமிருந்து ஓர் ஆண்டிற்கான விடுதலை சந்தா பெற்றுக் கொண்டா£ர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ். திருவாரூர் நகர் மன்றத் தலைவர் புவனப்பிரியாசெந்தில் 10 விடுதலை ஆண்டு சந்தாக்களை கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசுஆகியோரிடம் வழங்கினார் (10.8.2022). போக்குவரத்து துறை ஆய்வாளர் த.சரவணதாஸ் ஒரு ஆண்டு சந்தா ரூ.2000அய் தர்மபுரி மாவட்ட தலைவர்  வீ.சிவாஜியிடம் வழங்கினார். தஞ்சை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சந்திரசேகரமேத்தா (தி.மு.க) விடுதலை ஆண்டு சந்தா ரூ 2000அய்  தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ. டேவிட் ஆகியோரிடம் வழங்கினார் (11.8.2022).






No comments:

Post a Comment