கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் தென்சென்னை மாவட்ட ப.க. தலைவர் மு.இரா.மாணிக்கம் ‘விடுதலை' 10 ஆண்டு சந்தா தொகை ரூ.20,000த்தை அளித்தார். உடன்: தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் (சென்னை, 11.8.2022)
கிருஷ்ணகிரி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வி.வெற்றிச்செல்வன் ஓராண்டு விடுதலைச் சந்தா மாவட்ட செயலாளர் கா.மாணிக்கத்திடமும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ் ஓராண்டு சந்தாவை மாவட்ட தலைவர் அறிவரசனிடமும் வழங்கினர். மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி, கிருஷ்ணகிரி துணை வட்டாட்சியர் செந்தில்நாதன், கிருட்டிணகிரி ஆசிரியர் பாபு ஆகியோர் விடுதலை ஓராண்டு சந்தாக்களை மாவட்ட தலைவர் அறிவரசனிடம் வழங்கினர். உடன்: மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், நகரத் தலைவர் கோ. தங்கராசன். கோவை பெரியார் பெருத்தொண்டர் நீலகிரி 5 விடுதலை ஆண்டு சந்தா தொகை ரூ10,000அய் கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரனிடம் வழங்கினார். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் விடுதலை சந்தா ரசீது புத்தகம் ஒன்றை மாவட்டத் தலைவர் அறிவரசனிடம் பெற்றுக் கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஜய் ராஜசேகர், ஓராண்டு சந்தா ரூபாய் 2000அய் மாவட்ட தலைவர் அறிவரசனிடமும், நகர தொழில்நுட்ப அணி அமைப்பாளர் லட்சுமணன் அரையாண்டு சந்தா ரூபாய் ஆயிரத்தை மாவட்ட செயலாளர் கா.மாணிக்கத்திடமும் வழங்கினர்.
அறந்தாங்கி கழகமாவட்டத்தில் அறுபதாயிரம் விடுதலை சந்தா திரட்டும் களப்பணியில் ஈடுபட்டுள்ள மாவட்டத்தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா ஆகியோரிடம் கீரமங்கலம்பேரூராட்சிதலைவர்கே.சி.சிவக்குமார் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். கீரமங்கலத்தில் கழக காப்பாளர் தங்கராசு -ராஜலட்சுமி இணையர் விடுதலை சந்தா வழங்கினர். அறந்தாங்கி மாவட்டம் தெய்வத்தளி திமுக கிளைச் செயலாளர் இராசேந்திரன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். அறந்தாங்கி மாவட்டம் கீரமங்கலத்தில் பஸ் ஸ்டாண்டு இரவி ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். தஞ்சை அரசு வழக்குரைஞர் கே.ஆறுமுகம் மா.திராவிடசெல்வத்திடம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். சேலம் தாதகாப்பட்டி பொதுநலத்தொண்டர் மூ.பெ.சரவணன் ஆறுமாத விடுதலை சந்தா வழங்கினார். சேலம் தாகூர் நகரில் ஆரா கிளினிக் திறப்பு விழாவை முன்னிட்டு மேனாள் மண்டல செயலாளர் சி.பூபதி விடுதலை சந்தா மூவாயிரம் வழங்கினார். மேட்டுப்பாளையம் குமாரகுலம் விடுதலை சந்தாவை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, நகரச் செயலாளர் சந்திரன் ஆகியோரிடம் வழங்கினார் (8.8.2022) உடன்: காரமடை ராஜா.
No comments:
Post a Comment