ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுதிட்டம்: வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுதிட்டம்: வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு

சென்னை, ஆக. 23 ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்துக்கான வருமான உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசாணையில் கூறி யிருப்பதாவது:

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்துக்கு இதற்கு முன்னர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதிக எண் ணிக்கையிலான நபர்கள் பயனடையும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாடு அடைந்து சமுதாய சமநிலைக்கு உதவும் என்றும், இவ்வாறு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 2 லட்சத் திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்துவதால், பி.எம்.ஏ.ஜெ.ஏ.ஒய். திட்டத்தில் உள்ள ஆண்டு உச்சவரம்புக்கு இணையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment