கல்வித்துறைக்கு ஒரே ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடி முதலமைச்சர் ஒதுக்கீடு! உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 2, 2022

கல்வித்துறைக்கு ஒரே ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடி முதலமைச்சர் ஒதுக்கீடு! உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி


விழுப்புரம், ஆக.2- தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு கல்வி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு வெறும் 6,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் மாநில அரசு ஆண்டு ஒன்றுக்கு கல்வித் துறைக்கு 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருபவர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பெருமிதத்துடன் குறிப் பிட்டார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி. 

31.7.2022 அன்று சென்னையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு கல்விக்கு ஒன்றிய அரசு இதுவரை 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக் கீடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார் அதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு இதுவரை பள்ளி கல்வித்துறைக்கும் உயர்கல்வித் துறைக்கும் சேர்த்து 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ஆனால் தமிழ் நாடு அரசு கல்வித்துறைக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 53 சதவீதம் பேர் உயர்கல்வி பயின்று இருப்பதாக பெருமிதத்துடன் குறிப் பிட்டார்.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு திராவிடத்தை பற்றியோ, கல்வித்துறை பற்றியோ ஏதும் தெரியாது வாய்க்கு வந்ததெல்லாம் உளறிக் கொண்டிருப் பவர்தான் பாஜக தலைவர் அண்ணா மலை தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்து றைக்கும், உயர்கல்வித் துறைக்கும் தமிழ்நாடு அரசால் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு வதன் காரணமாக இன்று இந்தியா விலேயே தமிழ்நாட்டில்தான் பள்ளிக் கல்வித் துறையும் உயர்கல்வி துறையும் சிறந்து விளங்குவதாக அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment